தங்கள் ஆர்பிட்டர் மூலம் இந்தியாவின் விக்கரம் லேண்டரை நாசா படம் பிடித்துள்ளது. அந்த புகைப்படங்களை வைத்து லேண்டரை தொடர்பு கொள்ளும் ஆராய்சியை இஸ்ரோ தீவிரபடுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை யாரும் ஆராயத் துணியாத நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்தியாவின் சந்திராயன் 2 கடந்த ஜீலை 22 ஆம் தேதி  விண்ணில் ஏவப்பட்டது.  சுமார 47 நாட்கள் பயணித்து நிலவில் தரையிறங்க வெறும் 2 கிலே மீட்டர் இடைவெளியே இருந்த நேரத்தில் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதானல் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின்  திட்டம் பின்னடைவை சந்தித்தது. ஆனாலும் பல ஆயிரம் ஆண்டுகளால சூரிய ஒளியே இன்றி இருள் சூழ்ந்த நிலையில் மர்மநிறைந்த நிலவின் தென்பகுதியில் மாயமான லேண்டரை தேடும் பணியில் இஸ்ரோ தீவிரம் காட்டியது. இந் நிலையில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆர்பிடர் விகரம் லேண்டரின் இருப்பிடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இஸ்ரோவின் தேடுதல் முயற்ச்சியில் நல்ல முன்னேற்றமாக அமைந்தது. 

லேண்டர் இருக்கும் இடம் தெரிந்தாலும் அதிலிருந்து சிக்னல் இல்லை. ஆனாலும் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயிற்சியில் இஸ்ரோ தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எப்போதும் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சிகளை கூர்ந்து கவனித்துவரும் அமெரிக்கா , ரஷ்யா போன்றநாடுகள் இந்தியாவை இம் சத்திராயன் திட்டத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் தானாக முன்வந்து  நாசா இஸ்ரோவுடன் கை கோர்ந்துள்ளது. அதன் முயற்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கள் எல்ஆர்ஓ என்ற ஆர்பிட்டரின் மூலம் விக்ரம் லேண்டருக்கு  நாசா ஹலோ சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது, இருந்தாலும் அதற்கு லேண்டரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. 

 

எனவே தன்னுடையை சோதனையை அடுத்தக் கட்டத்திற்கு  கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள நாச தங்களின் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை மிக நெருக்கத்திலிருந்து புகைப்படம் எடுத்துள்ளது. அப் புகைக்கபடங்கள்  இந்தியாவிடம் கிடைத்த உடன் இஸ்ரோ லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்ச்சிகள் அடுத்தகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.