உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க இஸ்ரேல் விஞ்ஞானிகள் மருந்தை உருவாக்கி இருப்பதாகவும் ,  அது தொடர்பான அறிவிப்பு விரைவில்  வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது .  இஸ்ரேலில் இதுவரை 60 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ள நிலையில் இஸ்ரேல்  மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம்காட்டி வருகிறது.  இந்நிலையில் மருந்து கண்டுபிடிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உலகை அச்சுறுத்தும் கொடிய வைரஸ் பாதிப்பினால் இதுவரை 4,627 பேர் உயிரிழந்துள்ளனர்,  சுமார் 1, 26 லட்சம் பேருக்கு இந்த வைரஸ்  தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

 

இந்த வைரஸ் உருவாக்கி மூன்று மாதங்களாகியும் இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ,  அதாவது காய்ச்சல் , உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் புற்று நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்தி வருகின்றனர் .  இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சிலநேரங்களில் உயிரிழப்புகளும்  நிகழ்ந்துவருகிறது.  ஏழை பணக்காரன் என எந்த பாகுபாடுமின்றி அனைவர்க்கும் து பரவுவதைபோல்  வல்லரசு நாடுகளிலும் தன் கோரத் தாண்டவத்தால் அந்நாடுகளை கபளீகரம் செய்து வருகிறது.  அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் கொரோனாவுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .  அந்நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கிய மருந்துகள் இறுதி கட்ட  சோதனைகளில் உள்ளது. 

இதில் சில நிறுவனங்களின் ஆய்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது .  அந்தவகையில் இஸ்ரேல் நாட்டின் உயிரியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில் , பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின்னர் மருந்து கண்டுபிடிப்பு இறுதிநிலை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பரிசோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது .  அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் சில நாட்களில் கொரோனாவுக்கு  தடுப்பூசி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என ஞானிகள் கூறியதாக இஸ்ரேல் நாளிதழில்  செய்தி வெளியாகி உள்ளது.   ஆனால் இந்த தகவலை  இன்னும்  அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது .