இஸ்ரேல் மக்கள் இந்தியாவை மறக்கவே மாட்டார்கள்..!! மோடிக்கு உருகி உருகி நன்றி சொன்ன நெதன்யாகு..!!
இந்தியா செய்த உதவியை எப்போதும் இஸ்ரேல் மக்கள் மறக்க மாட்டார்கள், இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் இஸ்ரேல் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு 5 டன் மருந்துப் பொருட்களுடன், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அளித்துள்ள நிலையில் , இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் , இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் இஸ்ரேல் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து கடந்துள்ளது , இத்தாலி , பிரான்ஸ் , ஸ்பெயின் , அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இதுவரையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் பிரத்தியேக தடுப்பூசி இல்லாததால் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன .
ஆனாலும் மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்கா பரிந்துரை செய்துள்ளது, இந்நிலையில் உலக நாடுகள் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றனர் , மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த மாத்திரைகள் அதிக அளவில் கையிருப்பு உள்ளது என்பதை அறிந்து கொண்ட உலக நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்க வேண்டுமென இந்தியாவிடம் கோரிக்கை வைத்தனர் , குளோரோகுயின் மாத்திரைகள் கேட்டு இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து அமெரிக்காவுக்கு மனிதநேய அடிப்படையில் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
அதுமட்டுமல்லாது இத்தாலி , ஈரான் , பிரான்ஸ் , இஸ்ரேல் , உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மனிதநேய அடிப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பிவைத்து வருகிறது, இந்நிலையில் 5 டன் மருந்து மாத்திரைகளுடன் , ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இஸ்ரேலுக்கு இந்தியா அனுப்பிவைத்தது, அது ஜெருசலேமை அடைந்துள்ள நிலையில் . அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு இந்தியாவுக்கு நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்துள்ளார் , இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இஸ்ரேலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் , 86 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் , சுமார் 121 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர் , சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை தொடர்பு கொண்ட இஸ்ரேலிய அதிகாரிகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்து பொருட்களை அனுப்ப வேண்டுமென இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தனர் .
ஆனால் இந்தியாவும் உள்நாட்டு தேவைக்காக மருந்து தேவை என்ற காரணத்தினால் ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது , இந்நிலையில் பிரதமர் மோடியுடன் மீண்டும் நான் தொலைபேசியில் உரையாடினேன் , அவர் மருந்து வழங்குவதாக ஒப்புக்கொண்டார் , இந்நிலையில் அவர் சொன்னபடியே கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளிட்ட 5 டன் மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் , இந்தியா செய்த உதவியை எப்போதும் இஸ்ரேல் மக்கள் மறக்க மாட்டார்கள், இந்திய பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் இஸ்ரேல் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.