Asianet News TamilAsianet News Tamil

உயிர்க்கொல்லி கொரோனாவை ஒழித்து கட்ட மருந்து கண்டுபிடிப்பு... இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். உரிய அனுமதி கிடைத்தவுடன் வர்த்தக ரீதியான உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Israel biological institute claims to have found antidote to coronavirus...israel pm
Author
Israel, First Published May 5, 2020, 2:44 PM IST

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார். உரிய அனுமதி கிடைத்தவுடன் வர்த்தக ரீதியான உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 36 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.5 லட்சத்திற்கும் மேலானவர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றிற்கு இதுவரை சிகிச்சை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்த ஆராய்ச்சிகள் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

Israel biological institute claims to have found antidote to coronavirus...israel pm

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு உதவும் முக்கியமான தடுப்பு மருந்தினை இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நப்தாலி பென்னட் கூறுகையில், "பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ஐ.ஐ.பி.ஆர் உருவாக்கியுள்ள மோனோக்ளோனல் நியூட்ரலைசிங் ஆன்டிபாடி, நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்கக்கூடியது. இந்த மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு காரணமான இந்நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையைக் கொண்டு வந்தது எனக் கூறினார்.

Israel biological institute claims to have found antidote to coronavirus...israel pm

மேலும், இந்தத் தடுப்பு மருந்துக்கு உரிய அனுமதி பெறப்படும் என ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இந்த மருந்து உற்பத்தியைத் தொடங்குவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios