கொரோனா வைரஸில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹாலை குடித்த 300 ஈரானியர்கள் உயிரிழந்துள்ளனர் ஆல்கஹால்  உட்கொண்டால் கொரோனா  வைரஸ் பரவாது என வதந்தியால் ஆல்கஹாலை தவறுதலாக உட்கொண்டதால் இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இன்னும் பலர் தவறுதலாக ஆல்கஹாலை பயன்படுத்தி பார்வைக்கோளாறு பிரச்சினைக்கும் ஆளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது .  ஐக்கிய அரபு நாடுகள் முழுவதும் இதன் தாக்கம் தீவிரமாக  உள்ளது .  இந்நிலையில் தவறான நம்பிக்கை அடிப்படையில் ஆல்கஹால் மற்றும் எத்தினால் உட்கொண்ட  நூறு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்  ஈரான் மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் நிலையில் அங்கு    போலிய வைத்தியங்களும் தவறான வதந்திகளும் பரவிவருகிறது ,  அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து அறிவித்து வருகிறது என  அந்நாட்டு  மக்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள ஈரானிய மருத்துவரும் நச்சு உயிரியல் ஆய்வாளருமான  ஹவுடோ ஈரானில் வைரஸ் பரவி வருகிறது என்ற ஆபத்தை உணராமல் மக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் ,  இந்நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம்  இல்லை எனவும் தெரிவித்துள்ளார் . தவறாக போலீ மருந்துகளை பின்பற்றி வருகின்றனர் ,  அதன் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் உட்கொண்டு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.   இங்கு உள்ள பெரும்பாலான மக்களுக்கு மூன்று வாரங்களில் குணமாகக் கூடிய சாதாரண காய்ச்சல் இருமல் அறிகுறிகள் ஏற்படுகின்றன ,  சிலருக்கு மட்டுமே  குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் காய்ச்சல் நிமோனியா வரை சென்று மரணத்தை ஏற்படுத்துகிறது .  ஈரானில் இந்த காய்ச்சல் மனித பேரிழப்பை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது .

 

 80 மில்லியன் மக்கள் வசிக்கும் ஈரானில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதேபோல்,  தவறான மருத்துவ சிகிச்சைகளை பின்பற்றும் மக்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர்.  இதனால் அவர்கள் பல உபாதைக்கு ஆளாகி வருகின்றனர்.     விஸ்கியில் தேன் கலந்து சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என்றும்,  கை சுத்திகரிப்பான்களில் ஆல்கஹால் உள்ளது ,  அதனால் தான் அது கொரோனாவை அழிக்கிறது.   எனவே ஆல்கஹால் குடிப்பதால்  உடலில் தொற்றும்  வைரஸ் கொல்லப்படும் என்று தவறாக வதந்திகள் பரவி வருகிறது .  இதன் எதிரொலியாக பலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ஆல்கஹால் உட்கொண்டு உயிரிழக்கும் அவலம் தொடர்கிறது.  ஈரானில் இதுவரை  சுமார் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,  சுமார் 2200 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.  தவறான நம்பிக்கையில் ஈரானில் எத்தனால் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால், பலர் மூளை பாதிப்பு பார்வை கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.