அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைக்கு 80 மில்லியன் டாலர் சன்மானம்...!! ஈரான் அதிரடி அறிவிப்பு...!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு என்பது மில்லியன் டாலர் வழங்கப்படும் , ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு என்பது மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என ஈரான் நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ சேனலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்கா , ஈரான் , இடையே ஏற்கனவே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இருநாடுகளும் ஒருவரை மாற்றி யொருவர், கடுமையாக எச்சரித்து வருகின்றனர் . கடந்தவாரம் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை தாக்குதல் நடத்தியது, அதில் அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார், அத்துடன் அங்குள்ள அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, இத் தாக்குதலுக்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்திருந்தது . தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார் . அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படை பாக்தாத் விமான நிலையம் அருகே நடத்திய தாக்குதலில் குர்திஷ் படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார் அவருடன் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் . இதில் கடும் கொந்தளிப்புக்கு உள்ளான ஈரான் அமெரிக்காவின் இந்த கொடூர செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா தன் செயலுக்கு வருந்தும் அளவிற்கு அந்த பதிலடி இருக்கும் எனவும் ஈரான் கூறியுள்ளது. அதே நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இனியும் அமெரிக்காவை சீண்டிப் பார்க்கும் வேலையில் ஈரான் இறங்கினால் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது , இந்நிலையில் உயிரிழந்த சுலைமானியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது, இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் . சுலைமானின் இறுதிச்சடங்கு அரசின் அதிகாரப்பூர்வ சேனலில் ஒளிபரப்பப்பட்டது . அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு என்பது மில்லியன் டாலர் வழங்கப்படும் , ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில் அதனை கணக்கில் கொண்டு என்பது மில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது என அப்போது அறிவித்தனர். ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .