Asianet News TamilAsianet News Tamil

ஈரானுக்கு ஈடுகொடுக்குமா அமெரிக்கா... ஒரே நேரத்தில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. கூட்டநெரிசலில் சிக்கி 35 பேர் பலி..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமானி உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டார். காசிம் கலைமானி ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. 

Iran Soleimani... 35 killed in fatal stampede at funeral
Author
Iran, First Published Jan 7, 2020, 5:06 PM IST

ஈரான் ராணுவ தளபதி கலைமானி இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 48 பேர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Iran Soleimani... 35 killed in fatal stampede at funeral

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமானி உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டார். காசிம் கலைமானி ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். காசிம் சுலைமானி கொல்லப்பட்ட பிறகு ஈரான் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. 

Iran Soleimani... 35 killed in fatal stampede at funeral

இந்நிலையில், ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது. மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர்.

Iran Soleimani... 35 killed in fatal stampede at funeral

இதனையடுத்து, சுலைமானியின் உடல் பெரிய வாகனத்தில் வைக்கப்பட்டு, மக்கள் வெள்ளத்தில் மிதந்தவாறே கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 35 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios