இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
Israel- Iran War: ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு எதிராக, காசா மீது இஸ்ரேல் தொடங்கிய போர் மூலம் நிலைமை மோசமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக ஈரான் செயல்படும் நிலையில், அந்நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபரில் 300-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி பெரும் சேதத்தை ஈரான் ஏற்படுத்தியது.
ஈரான் மீது இஸ்ரேல்
இந்நிலையில், ஈரானின் அணுஆயுத திட்டங்களை கைவிடச் செய்யும் வகையில் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி முடிந்தது. இதனையடுத்து ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அடங்கிய ராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்குதலை அரங்கேற்றியது.
ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் பலி
இதில் ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி, 2 அணு ஆயுத விஞ்ஞானிகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது. இதனையடுத்து ஈரான் பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளும் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதிலடி தாக்குதல் கடுமையானதாக இருந்தது. நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் முக்கிய பகுதிகளில் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது அடுத்துடுத்து ஏவுகணைகளை ஏவிய ஈரான்
குறிப்பாக இஸ்ரேலின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்திய ஈரானின் ஏவுகணைகள் கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தைத் தாக்கியது. ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் 50 ஏவுகணைகளை தடுத்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் பலத்த தாக்குதலை தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
