ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் Akbar Hashemi Rafsanjani மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

 

ஈரான் முன்னாள் அதிபர் Akbar Hashemi Rafsanjani கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். 82 வயதான அவர், தலைநகர் தெஹ்ரானின் வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி Akbar Hashemi Rafsanjani உயிரிழந்தார். 

 

Akbar Hashemi Rafsanjani 1989 முதல் 1997 வரை ஈரான் நாட்டு அதிபராக பதவி வகித்துள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சர், நாடாளுமன்ற தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். ஈராக்குடனான போரின் போது இவர் ராணுவ தளபதியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உயிரிழந்த Akbar Hashemi Rafsanjani-க்கு, தற்போதைய ஈரான் அதிபர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.