டொனால்ட் டிரம்ப் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்புல பயங்கர டென்ஷன். உக்ரைன் போர்ல டிரம்ப், ஜெலென்ஸ்கி மாறி மாறி சண்டை போட்டாங்க.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) வெள்ளை மாளிகைல சந்திச்சப்போ பயங்கரமா வாக்குவாதம் வந்துச்சு. துணை அதிபர் வேன்ஸ் கூட அங்க இருந்தாரு. இரண்டு தலைவர்களும் ஒருத்தருக்கொருத்தர் வார்னிங் குடுத்தாங்க. டிரம்ப் கோபத்துல, நீங்க சமாதானம் பண்ணிக்கிறீங்களா, இல்ல நாங்க வெளிய போறோமான்னு கேட்டாரு. ஜெலென்ஸ்கி உடனே, நாங்க நல்லா சண்டை போட்டுட்டு இருக்கோம், நீங்க ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ்னு சொன்னாரு.
சந்திப்பில் நடந்தது என்ன?
மீட்டிங் ஆரம்பிச்சதும் டிரம்ப், ஜெலென்ஸ்கிய பிரஷர் பண்ணி, நீங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கீங்க.இந்த வார்ல நீங்க ஜெயிக்க மாட்டீங்கன்னு சொன்னாரு. ஜெலென்ஸ்கி உடனே, நாங்க எங்க நாட்டுல இருக்கோம், இன்னும் நல்லா சண்டை போட்டுட்டு இருக்கோம். நீங்க சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ்னு சொன்னாரு.
இந்த வாக்குவாதம் அப்படியே சூடு பிடிக்க ஆரம்பிச்சுது. ரெண்டு தலைவர்களோட சண்டைய பாத்துட்டு அங்க இருந்த இன்டர்நேஷனல் மீடியா கூட ஷாக் ஆயிட்டாங்க. டிரம்ப் டைரக்டா, நீங்க லட்சக்கணக்கான மக்களோட வாழ்க்கைய வச்சு விளையாடிட்டு இருக்கீங்க. நீங்க மூணாவது உலகப் போருக்கு போயிட்டு இருக்கீங்க, இது அமெரிக்காவுக்கு அவமானம்னு சொன்னாரு. டிரம்ப் பேசுனத கேட்டு ஜெலென்ஸ்கிக்கு பயங்கர கோவம் வந்துச்சு.

சமாளித்த ஜேடி வேன்ஸ்
அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ் (JD Vance) ஜெலென்ஸ்கிய சாந்தப்படுத்த ட்ரை பண்ணி, இந்த வார முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை ரொம்ப முக்கியம்னு சொன்னாரு. ஆனா ஜெலென்ஸ்கி உடனே, என்ன பேச்சுவார்த்தை? எங்க ஆளுங்க செத்துட்டு இருக்காங்கன்னு கேட்டாரு.
இத கேட்டு டிரம்ப் இன்னும் கோவமாகி, நாங்க உங்களுக்கு 350 பில்லியன் டாலர் (Ukraine Aid) ஹெல்ப் பண்ணோம், புது மிலிட்டரி எக்யூப்மென்ட்ஸ் குடுத்தோம். அமெரிக்கா ஹெல்ப் பண்ணலனா இந்த வார் ரெண்டு வாரத்துல முடிஞ்சிருக்கும்னு சொன்னாரு. ஜெலென்ஸ்கி டைரக்டா, ஆமா ஆமா, இததான் புடின் (Vladimir Putin) கூட சொல்றாருன்னு சொன்னாரு!
டிரம்ப் ஜெலென்ஸ்கிய திட்டுற மாதிரி, மக்கள் செத்துட்டு இருக்காங்க, உங்க சோல்ஜர்ஸ் கம்மியாகிட்டு இருக்காங்க, அப்படியும் நீங்க சண்டை நிறுத்த மாட்டீங்களா (Ceasefire)? நீங்க இப்போவே சண்டை நிறுத்தறத அனௌன்ஸ் பண்ணுங்க, அப்போதான் குண்டு வெடிக்கிறது நின்னு மக்களோட உயிர் காப்பாத்த முடியும்னு சொன்னாரு. ஆனா ஜெலென்ஸ்கி தன்னோட சைடுல இருக்கற நியாயத்த வேகமா சொல்லிட்டே இருந்தாரு. ஜெலென்ஸ்கியோட பிடிவாதத்த பாத்துட்டு டிரம்ப் கடைசியா, நீங்க இப்படி நடந்துக்கிட்டா, அமெரிக்கா உக்ரைனோட பிசினஸ் பண்றது கஷ்டம்னு சொன்னாரு.
இதையும் படிங்க:
டிரம்புக்கு பணிந்து அமெரிக்கா சென்றார் ஜெலன்ஸ்கி! முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்து!
