ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் மனு... நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம்!!

போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. 

International Court of Justice will issue an interim injunction tomorrow in Ukraine case

போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மருத்துவமனை, மக்கள் குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல கட்டிடங்கள் உருகுலைந்தன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் நாள்தோறும் தீவிரம் அடைந்து வருகிறது. உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா, தற்போது தலைநகர் கீவை நெருங்கி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில், கியேவின் புறநகர்ப் பகுதியில் சண்டை கடுமையாகியுள்ளது.

International Court of Justice will issue an interim injunction tomorrow in Ukraine case

தலைநகரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் பீரங்கித் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.  ரஷ்யாவின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த மனு மீதான விசாரணையை ரஷ்யா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

International Court of Justice will issue an interim injunction tomorrow in Ukraine case

மேலும் போர் என்ற பெயரில் தங்களது நாட்டுக்குள் புகுந்து ரஷிய படைகள் சட்ட விரோத தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் கூறி உள்ளது. போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் உக்ரைன் ரஷ்யா மீது குற்றம்சாட்டியது. உக்ரைனின் மனு மீது சர்வதேச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நாளை சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர் தொடர்பாக சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளது. அப்போது ரஷ்யாவுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது தெரிய வரும். சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு நாடு இணங்கவில்லை என்றால், ரஷ்யா வீட்டோ அதிகாரம் கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலிடம் நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios