75 ஏக்கர் தென்னந்தோப்பில் வெடிகுண்டு ஆலை!! தீவிரவாதிகளுக்கு பயிற்சி... கொலை நடுங்க வைக்கும் பயங்கரம்...
இலங்கையில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி பெற்றதாகவும், வெடிபொருள் குடோனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி பெற்றதாகவும், வெல்லம்பிட்டியில் வெடிகுண்டு ஆலை
வெடிபொருள் குடோனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தேவாலயங்கள், சொகுசு உணவகங்களில் நடந்த இந்த தாக்குதலில் 45 குழந்தைகள் உட்பட பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் தீவிரவாதிகள் இலங்கையில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனையடுத்து இலங்கை முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வந்தது. மேலும், நேற்று முதல் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நிகழ்வதும் வைத்த குண்டுகளை கண்டுபிடிப்பதுமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இலங்கையில் 160 தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியானது.
இந்நிலையில், கொழும்பு அருகே வெல்லம்பிட்டியில் சந்தேகப்படும் வகையில் தொழிற்சாலை இயங்கி வருவதாக புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு நடத்திய சோதனையில் அங்கு ஏராளமான வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 160 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வானாத்தவில்லு என்ற இடத்தில் 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும், அங்கு நடத்திய சோதனையில் தீவிரவாதிகள் பயிற்சி பெற்ற பட்டியல் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு இதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் உயர் படிப்பு படித்த பட்டதாரிகளும் உள்ளதகவும், இந்த தற்கொலை படை தாக்குதலில் பெண் ஒருவர் இருப்பதாகவும் புலனாய்வு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.