Tsunami Alert: இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி.!
இந்தோனேஷியாவில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவில் 7.6 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேஷியாவின் மெளமரே அருகே சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவாகியுள்ளளது. இதனால், பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடலில் பெரும் அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சுனாமி எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கம் ஃப்ளோர்ஸ் தீவுப்பகுதியில் கடலுக்கடியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் பலு நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் 4300 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.