இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்..!
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவாகி உள்ளது. இதனால், தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று உள்ளூர் நேரப்படி காலை 8.46 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், அம்போனுக்கு வடகிழக்கில் 37 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் சுற்றளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் உடனடியாக விடப்படவில்லை. இதனால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.