#UnmaskingChina: எல்லை நோக்கி விரைந்த ஜெட் விமானங்கள்...!! அதிரடிக்கு தயாராகும் இந்திய விமானப்படை..!!
இந்நிலையில் இந்திய தரப்பில், முன்னணி சுகோய் -30 எம்.கே.ஐ, மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானப்படை வீரர்களையும் விரைந்து விமான தளத்தில் குவித்து வருகிறது.
கிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இருநாட்டுக்கும் இடையே பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா தனது போர் விமானங்களை எல்லை நோக்கி நகர்த்தி வருகிறது, மேலும் வங்காள விரிகுடாவில் கூடுதல் போர்க் கப்பல்களையும் நிறுத்தி சீனாவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயார் என்பதை உணர்த்தியுள்ளது. கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி, சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால், பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர்.
அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத பேரிழப்பாக இது கருதப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 35 சீனர்கள் கொள்ளப்பட்டதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா இதுவரை அதுகுறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சித்தரும் தகவல் ஒன்றை அது வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு லடாக் எல்லைப்பகுதியான கால்வான் முழுவதும் சீனாவுக்கு சொந்தமெனவும், அதில் இந்தியா சாலைகட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் சீனா தடாலடியாக கூறியுள்ளது. தனக்குள்ள நாடு பிடிக்கும் எண்ணத்தை சீனா அறிக்கையின் வாயிலான அப்பட்டமாக வெளிபடுத்தியுள்ளது. ஏற்கனவே வீரர்களை இழந்த கோபத்தில் உள்ள இந்தியாவுக்கு சீனாவின் இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எல்லையை நோக்கி இந்தியா தனது ராணுவ துருப்புகளையும் ஜெட் விமானங்களையும் நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியா தனது போர் விமானங்களை எல்லையில் உள்ள விமானப்படை தலங்களை நோக்கி நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் வங்காள விரிகுடா கடலில் கூடுதல் போர்க் கப்பல்களையும் தயார்படுத்தி வருகிறது, மேலும் புதிய வகை அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் போன்றவற்றை அதிக உயரமுள்ள லடாக் மலைச்சிகரங்களில் நிறுத்திவருகிறது.
"ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் எங்கள் 20 வீரர்களை கொடூரமாக கொலை செய்ததன் மூலம் சீனா எங்கள் சிவப்புக் கோட்டை கடந்துவிட்டது. விரிவாக்க நடவடிக்கையின் எந்தவொரு சுழலுக்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று ஒரு உயர் இராணுவ அதிகாரி கூறியுள்ளார். மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ), படைகளை திருப்பப் பெறுவதற்கான மனநிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது 3,488 கி.மீ நீளமுள்ள எல்.ஐ.சி யிலும் தனது படைகளை கட்டமைத்து வருகிறது. உதாரணமாக, சீன மக்கள் விடுதலை ராணுவம் பாங்கொங் த்சோவின் வடக்குக் கரையில் “ஃபிங்கர் -4 முதல் 8 வரை” (8 கி.மீ தூரத்தால் பிரிக்கப்பட்ட மலைப்பகுதிகளில்) ஏராளமான புதிய பங்கர்களை கட்டியுள்ளன. மே மாத தொடக்கத்தில் இருந்து, இந்த பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து இந்திய ரோந்துகளையும் அவர்கள் தடுக்கின்றனர்.கல்வான் மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளின் நிலைமையும் இதேபோல் உள்ளது, சீனாவும் அதன் ஜே -11 மற்றும் ஜே -8 படைப்பிரிவின் எண்ணிக்கையையும், திபெத்தில் உள்ள ஹோட்டன் மற்றும் காஷ்கர் விமான நிலையங்களில் நீண்ட தூரத்திற்கு குண்டுவீசும் தளவாடங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய தரப்பில், முன்னணி சுகோய் -30 எம்.கே.ஐ, மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானப்படை வீரர்களையும் விரைந்து விமான தளத்தில் குவித்து வருகிறது.
இந்நிலையில் ஐ.ஏ.எஃப் தலைவர் ஏர் தலைமை மார்ஷல் ஆர்.கே.எஸ் பதாரியா லே மற்றும் ஸ்ரீநகர் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பிராந்தியத்தில் செயல்பாட்டு தயார்நிலையை பார்வையிட்டார். லே, ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் பரேலி முதல் தேஸ்பூர் வரை சீனாவுடனான வடக்கு எல்லைகளை எதிர்கொள்ளும் அனைத்து விமான தளங்களையும் ஐ.ஏ.எஃப் முழுமையாக செயல்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.