இந்திய விமானப்படைக்கு பயங்கர ஆபத்து...!! உள்ளே நுழைந்து தாக்க ஜெய்ஷ்-ஐ-முகமது தீவிரவாதிகள் மோசமான திட்டம்...!!
பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த முனைப்புகாட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அது தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் விமானப்படை தளங்களை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய விமானப் படைத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, விமானப்படை தளங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது, இதுவரை அது எடுத்த அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்ததால், உச்சகட்ட விரக்தியில் உள்ளது பாகிஸ்தான். இதனால் தங்கள் நாட்டில் பயிற்ச்சி பெற்றுவரும் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவசெய்து இந்தியாமீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டிவருகிறது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த முனைப்புகாட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அது தற்கொலைப் படை தாக்குதலாக இருக்கலாம் எனவும் விமானப்படை தளங்களை குறிவைத்து அந்த தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டதில் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாக உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தெச்சரிக்கையைத் தொடர்ந்து , ஸ்ரீநகர் , அமிர்தசரஸ், பதான்கோட், உள்ளிட்ட விமானப்படைத் தளங்கள் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விமானப்படை தளங்களில் இரண்டாம்கட்ட ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்களின்படி இது ரெட் அலர்ட் ஆக மாறவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தேவைப்பட்டால் விமானப் படைத் தளத்தை ஒட்டியுள்ள பள்ளிகளை மூடவும், மற்றும் மக்கள் நடமாட்டத்திற்கு அங்கு தடை விதிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது