indian gave a house to an american

அமெரிக்காவின் ஹாஸ்டன் நகரில் இந்தியரைக் காப்பாற்ற தனது மார்பில் துப்பாக்கி குண்டுகளைத் தாங்கிய அமெரிக்க இளைஞருக்கு ரூ.65 லட்சம் மதிப்பில் வீடு ஒன்றை அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் நன்றிக்கடனாக அளித்துள்ளனர்.

ஹாஸ்டன் மாநிலம், கனாஸ் நகரில் இந்தியரும், ஆந்திரமாநிலத்தைச் சேர்்ந்த சாப்ட்வேர் எஞ்சினியருமான சீனிவாசன் குச்சிபோட்லாவும்(வயது32), அவரின் அமெரிக்க நண்பரான அலோக் மட்சனி ஆகியோர் பாரில் கடந்த மாதம் மது அருந்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த அமெரி்க்க ஓய்வு பெற்ற கப்பற்படைஅதிகாரி சீனிவாசன் குச்சிபோட்லா, அலோக் மட்சனி ஆகியோர் மீது இனவெறியுடன் பேசி துப்பாக்கி சூடு நடத்தினார். அதை பார்த்துக்கொண்டு இருந்த அமெரிக்க இளைஞர் இயான் கிரில்லாட்(வயது22) அதை தடுக்க முயன்றபோது அவருக்கும் மார்பு, கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் இந்தியர் சீனிவாசன் குச்சிபோட்லா கொல்லப்பட்டார், கிரில்லாட், அலோக் மட்சனியும் படுகாயமடைந்தனர். இந்நிலையில், இந்தியரைக் காப்பாற்ற முயன்ற இயன் கிரில்லாட்டுக்கு நன்றியும் தெரிவிக்கும் வகையில், ஹாஸ்டன் நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஏறக்குறைய ரூ.67 லட்சம் (ஒரு லட்சம் டாலர்) நிதி திரட்டினர்.

அந்த பணத்தைக் கொண்டு இயன் கிரில்லாட்டுக்கு கனாஸ் நகரில் ஒரு வீடு வாங்கி பரிசு அளித்தனர். அதுமட்டுமல்லாமல், “ ஏ ட்ரூ அமெரிக்கன் ஹீரோ” என்ற பட்டத்தையும் வழங்கினர்.

கனாஸ் நகரில் நேற்றுமுன்தினம் இந்தியர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கிரிலாட் அழைக்கப்பட்டு இருந்தார். இந்தியரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த இயான் கிரில்லாட்டுக்கு பாராட்டு தெரிவித்த இந்தியர்கள் அவரை கவுரவிக்கும் விதமாக இந்தப் பரிசை அளித்தனர். அப்போது, இந்திய தூதர் நவ்தே சர்னேவும் நிகழச்சயி்ல் கலந்து கொண்டார்.

இது குறித்து ஹாஸ்டன் வாழ் இந்தியர்கள் பேஸ்புக்கில் வெளியி்ட்ட அறிவிப்பி்ல், “சுயநலமில்லாமல் இந்தியரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த இயான் கிரில்லாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ரூ.67 லட்சம் மதிப்பில் வீடு ஒன்றை ஹாஸ்டனில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பரிசு அளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட இயான் கிரில்லாட் பேசுகையில், “நான் சுயநலத்துடன் வாழ்ந்து வருகிறேனா என எனக்கு தெரியாது. அந்த துப்பாக்கிச் சூட்டை நான் தடுக்க முயலாமல், அல்லது ஒதுங்கிப் போய் இருந்தால், இன்று உங்கள் முன் நின்று இருக்கமாட்டேன்.

அந்த சம்பவத்தின் மூலம், உதவிசெய்தல், அன்பு குறித்து வலிமையான செய்தியை நான் உணர்த்திவிட்டேன். அதை பரப்பவும் செய்வேன். அதற்காக இந்தியர்கள் எனக்கு கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.