அந்தமானை அதிரவைத்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனை..!! உச்சகட்ட பீதியில் பாகிஸ்தான்..!!

21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வழக்கமாக செயல்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக  இரட்டைச் சோதனை நடத்தப்பட்டது என கூறப்பட்டுள்ளது. வழக்கமாக  ஏவுகணை சோதனை என்றால் அது   ஒடிசா மாநிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்த நிலையில் இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவில் நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 

indian did brahmos missile testing in andaman nicobar island - pakistan has fear

நேற்றைய முன் தினம் இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்  நடத்தியதில் இரு இந்திய  ராணுவ  வீரர்கள் மரணம் அடைந்தனர். காஷ்மீரில் எல்லையோர கிராமங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.  இதனையடுத்து இந்தியா கொடுத்த பதிலடி தாக்குதலில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்  செயல்பட்டுவந்த மூன்று தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் பத்து பேர் கொல்லப்பட்டனர் என நம்  ராணுவம் தெரிவித்துள்ளது. 

indian did brahmos missile testing in andaman nicobar island - pakistan has fear

இந்நிலையில் எதிரிகளை எச்சரிக்கும் வகையில் பாகிஸ்தான் சீனா எல்லைப்பகுதியான லடாக் மலைச் சிகரத்தில் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில்  ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்த இந்தியா திட்டமிட்டுவருகிறது இதற்கிடையில்  இந்திய விமானப்படை அந்தமான் நிகோபார் திவில் ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபட்டு அதில் வெற்றிகண்டுள்ளது.  எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அது மோதலாகும் பட்சத்தில் எதிரிகளுக்கு பாடம் புகட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சோதனை நடத்தப் பட்டுள்ளதாக இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

indian did brahmos missile testing in andaman nicobar island - pakistan has fear

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய விமானப்படை,  கடந்த  21 மற்றும்  22 ஆகிய தேதிகளில் வழக்கமாக செயல்பாட் பயிற்சியில் இந்தியா விமானப்படை ஈடுபட்டதுடன் அதில் இரண்டு ஏவுகணைகளை சோதித்து அதில் வெற்றிகண்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை என்றால்  ஒடிசா மாநிலத்தில் நடத்தப்படுவதுதான் வழக்கமாக இருந்த  நிலையில் இந்த முறை அந்தமான் நிக்கோபார் தீவில் நடத்தப்பட்டது என அதில் தெரிவித்துள்ளது.   தரையிலிருந்து தரைப்பகுதியில் உள்ள  இலக்கை நோக்கி நடத்தப்பட்ட இச்சோதனையில் இரண்டு ஏவுகணைகளுமே சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து திட்டமிட்டபடி  இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.  இந்தியாவின் இத் திடீர் சோதனை பாகிஸ்தான் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios