Asianet News TamilAsianet News Tamil

மோடி கண்ணசைத்தால் முடிந்தது கதை...!! பாகிஸ்தானுக்குள் நுழைய இராணுவம் தயார்...!! படைத் தளபதி உறுதி...!!

மத்திய அரசு அனுமதிகொடுத்தால்  பாகிஸ்தானுக்குள் நுழைந்து  அதன்  ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும்  இந்தியாவுடன் இணைக்க இராணுவம் தயாராக உள்ளது என்றார்.  உத்தரவுக்காக மட்டுமே இராணுவம் காத்திருக்கிறது 

indian army ready to crash the border army chief told
Author
Kashmir, First Published Sep 12, 2019, 6:52 PM IST

அனுமதி  கொடுத்தால், பாகிஸ்தான்  எல்லையில் நுழைந்து  அதன் பிடியில் உள்ள மீதமுள்ள காஷ்மீரையும்  மீட்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என இராணுவத்தளபதி  பிபின் ராவத் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர்  இவ்வாறு கூறியுள்ளார்.

indian army ready to crash the border army chief told

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. பாகிஸ்தானுடன் கூட்டுச்சேர்ந்து சீனாவும் இந்தியாவை எதிர்த்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில்  இந்தியா மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக கூறி  ஐநா மனித உரிமை கவுன்சிலில் பாகிஸ்தான் புகார் கொடுத்துள்ளது.  அத்துடன் சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லையில்  விமான பயிற்ச்சி என்ற பெயரில் போர் ஒத்திகை நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். சீனா,பாகிஸ்தானின் இத்தகைய பூச்சாண்டிக்கெல்லாம் ஒருபோதும் இந்தியா அஞ்சாது என பதிலடி கொடுத்துள்ளது.

indian army ready to crash the border army chief told 

அத்துடன்,  இனி இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வேலைகள் வேண்டாம் எனவும் சீனா,பாக் கை கடுமையாக எச்சரித்துள்ளது இந்தியா. இதற்கிடையில்  இந்தியாவைப்பற்றி  சர்வதேச நாடுகள் மத்தியில் தவறாக அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்ச்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. அதாவது காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான முசாபராபாதில் மக்களை திரட்டி நாளை பேரணி நடத்தவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

indian army ready to crash the border army chief told

அதற்கான வேலைகளில் பாகிஸ்தான் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இப்போரணி நடத்துவதின் மூலம் காஷ்மீர் மக்கள் இந்தியாவிற்கு எதிரான மனநிலையில் உள்ளனர் என்பது போன்ற  மாயையை உருவாக்குவதுடன், சர்வதேச சமூகத்தில் இந்தியாவைப்பற்றி தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நோக்கில் பாகிஸ்தான் இதை செய்யவுள்ளது.பாகிஸ்தானின் இத்திட்டத்தை இந்தியா கண்டித்துள்ளதுடன், இந்தியாவிற்கு எதிராக எத்தனை சதிவலைகளை பின்னினாலும் அது அத்தனையும் தோல்வியில்தான் முடிவும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது.

indian army ready to crash the border army chief told

இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள  இந்தியா இராணுவத்தளபதி பிபின் ராவத். இந்தியாவிடம் பாகிஸ்தான் பூச்சாண்டு காட்டிவருவதாக விமர்சித்தார். மத்திய அரசு அனுமதிகொடுத்தால்  பாகிஸ்தானுக்குள் நுழைந்து  அதன்  ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும்  இந்தியாவுடன் இணைக்க இராணுவம் தயாராக உள்ளது என்றார்.  உத்தரவுக்காக மட்டுமே இராணுவம் காத்திருக்கிறது என்ற அவர், முதல் திட்டமான காஷ்மீரை முழுவதுமாக இந்தியாவுடன் இணைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது. என்றார் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில்  உள்ள மீதமுள்ள காஷ்மீரை மீட்கும் அடுத்த திட்டத்தையும் உடனே செயல்படுத்த வேண்டும் என்றார் அவர். நாட்டின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நம் அரசு. அதற்கான முடிவை உரிய நேரத்தில்  எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios