எல்லையில் இருந்து பின்வாங்க மறுக்கும் இந்திய ஜவான்கள்..!! சீன மூட்டைப் பூச்சிகளை நசுக்க உறுதி..!!!

ஆனாலும் இதுவரை இரு தரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனால் எல்லையில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் இந்திய படைகள் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. 

Indian army have strong in border regarding indo-china border

இந்திய-சீன எல்லையான லடாக்கில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவதால், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  இதுவரை சீனா 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை குவித்து வைத்துள்ளதாகவும், போர் தளவாடங்களை கால்வான் பள்ளத்தாக்கில் நிறுத்தி வைத்திருப்பதாகவும்  செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் மூலும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இந்தியா-சீனா இடையே அமைந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு  விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே  நீண்ட நாட்களாக  சிக்கல் நீடித்து வருகிறது.இது தொடர்பாக இரு நாடுகளும் பலகட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டும் எல்லைக்கோட்டை வரையறுப்பதில் இன்னும்  முடிவு எட்டப்படவில்லை . இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ  என்ற ஏரிப் பகுதியில் சமீபத்தில்  இருநாட்டு படை வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

Indian army have strong in border regarding indo-china border

சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள அந்த ஏரியின் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது . அதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இந்நிலையில்  கடந்த மே- 5 ஆம் தேதி அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும்,  ரோந்து பணியில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு நடத்திய பேச்சு வார்த்தையில் அங்கு பதற்றம் தணிந்தது. இதேபோல் மற்றொரு பிரச்சனையில் கடந்த மே-9 அன்று சிக்கிம் எல்லையில் உள்ள நாகு -லா -பாஸ் அருகே கிட்டத்தட்ட 150 இந்திய -சீன இராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர், இந்த சம்பவத்தில் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் காயமடைந்தனர். இது இந்தியா- சீனா இடையே அசாதாரன சூழலை ஏற்படுத்தியது.  

Indian army have strong in border regarding indo-china border

இந்த சம்பவங்களையடுத்து கடந்த மே 22 ஆம் தேதி "இந்திய -சீன எல்லையான அக்சாய் சின் பிராந்தியத்திலுள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததுடன், சில பாதுகாப்பு  வசதிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியதாகவும்,  அதாவது  குடில்களை அமைத்ததாகவும் , கடந்த மே மாதம் தொடக்கத்திலிருந்து இந்திய ராணுவம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி, சீனா அந்த பகுதயில் தன் ராணுவத்தை குவித்து வருகிறது.  இந்தியாவும் பதிலுக்கும் ராணுவத்தை குவித்து சீனாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையில் லேவில் உள்ள 14 கார்ப்பஸ் தலைமையகத்தில் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம் நாரவனே அதிகாரிகளுடன் எல்லை நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் பாங்கொங் த்சோ எரி . கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீனா, இந்திய ரோந்துக்கு தடை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சீனா தனது படைகளை குவித்து வருவதுடன் எல்லையையொட்டியுள்ள அதன் பகுதியில் போர் பயிற்சிகளை நடத்த தயாராகி வருகிறது. Indian army have strong in border regarding indo-china border

பாங்கோங் த்சோ மற்றும் பிங்கர்-4 பகுதியில் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது . மற்ற இடங்களில் சீன துருப்புக்கள் முன்னேறுவதைத் தடுக்க இந்தியா வீரர்களின் எண்ணிக்கையும் எல்லையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு லடாக்கில், சீனாவின் 826 கி.மீ தூரத்தில்  நான்கு படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன, அதாவது சுமார் 16000 வீரர்கள். ஃபிங்கர் -4 பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் இந்தியாவும் பதிலுக்கு இந்திய படைகளை எல்லை நோக்கி நகர்த்தி வருகிறது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் அதை எதிர் கொள்ள இந்தியா தயாராகி வருகிறது என பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்திய ராணுவம் தனது ரோந்துப் பணிகளை எல்லையில் அதிகரித்துள்ளது. கால்வான் பிராந்தியத்திலும்,  பாதுகாப்பு படை இந்திய எல்லைக்குள் கூடாரங்களை அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவின் படைப்பிரிவு தளபதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில் உள்ளனர்.  அரசியல், மற்றும் இராணுவ பேச்சுவார்த்தைகள் அனைத்து மட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இதுவரை இரு தரப்புக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ஆனால் எல்லையில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் இந்திய படைகள் உறுதியாக இருந்து வருவது குறிப்பிடதக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios