5 நாட்களுக்கு ஒரு பில்லினியரை உருவாக்கும் இந்தியா! TOP-10 NRI எங்க இருக்காங்க தெரியுமா?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்கார வெளிநாட்டு இந்தியர்களை ஹூரூன் இந்திய பணக்காரர்கள் 2024 (Hurun India Rich List 2024)பட்டியல் வெளிப்படுத்துகிறது. கோபிசந்த் இந்துஜா & குடும்பத்தினர் ₹192,700 கோடி நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளனர், அதைத் தொடர்ந்து லட்சுமி நிவாஸ் மிட்டல் மற்றும் அனில் அகர்வால் & குடும்பத்தினர் உள்ளனர். சுயமாக உருவாக்கிய NRI பில்லியனர்களின் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்த பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.
ஹூரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024 (Hurun India Rich List 2024): இந்தியாவின் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி பற்றி மக்கள் நிறைய அறிந்திருக்கையில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பணக்காரர்கள் (என்ஆர்ஐக்கள்- NRI) யார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹூரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024-ல் 102 வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியாவிற்கு வெளியே சென்று சொந்தமாக தங்களது பரந்த செல்வ சாம்ராஜ்யங்களை கட்டியெழுப்பிய பில்லியனர்கள் அவர்கள்.
கோபிசந்த் இந்துஜா & குடும்பம்: பணக்கார என்ஆர்ஐ
ஹூரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024-ன் படி, லண்டனை தளமாகக் கொண்ட கோபிசந்த் இந்துஜா & குடும்பம், இந்தியாவின் பணக்கார வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆவர். அவர்களின் மொத்த நிகர மதிப்பு ₹1,92,700 கோடி. இரண்டாவது இடத்தில் இருக்கும் லட்சுமி நிவாஸ் மிட்டல், ஸ்டீல் கிங் என்று அழைக்கப்படும் ஆர்சலர்மிட்டலின் உரிமையாளர். பிரிட்டனில் வசிக்கும் எல்என் மிட்டல், ₹1,60,900 கோடி நிகர மதிப்பைக் கொண்டுள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் வேதாந்தா ரிசோர்ஸின் தலைவரான அனில் அகர்வால் & குடும்பம். லண்டனை தளமாகக் கொண்ட இந்த குடும்பம் தோராயமாக ₹1,11,400 கோடி நிகர மதிப்பைக் கொண்டுள்ளது.
ஹூரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024-ன் படி, அதிக எண்ணிக்கையிலான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். குறிப்பாக, இந்த வெளிநாட்டு இந்தியர்களில் 79 சதவீதம் பேர் வெற்றிக்கொடி நாட்டி சுயமாக உருவான பில்லியனர்கள். அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் பிரிட்டன் ஆகியவை அடுத்தடுத்த அதிக எண்ணிக்கையிலான வெளிநாடு வாழ் இந்தியர்களை கொண்டுள்ளன.
ஒவ்வொரு 5 நாட்களுக்கும் ஒரு புதிய பில்லியனரை உருவாக்கும் இந்தியா!
ஹூரூன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024, இந்தியா ஒவ்வொரு 5 நாட்களுக்கும் ஒரு புதிய பில்லியனரை உருவாக்குவதாக குறிப்பிடுகிறது. இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அண்டை நாடான சீனாவில் பில்லியனர் மக்கள் தொகை 25 சதவீதம் குறைந்துள்ளது.
2024-ம் ஆண்டில் 1539 புதிய நபர்கள் பில்லியனர் வரிசையில் இணைந்துள்ளனர். 17 புதிய பில்லியனர்களைச் சேர்ப்பதன் மூலம் ஹைதராபாத் பெங்களூரை முந்தியுள்ளது. இந்தியாவிற்குள் பில்லியனர்கள் வாழும் அடிப்படையில், மும்பை 386 பில்லியனர்களுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து புது டெல்லி 217 மற்றும் ஹைதராபாத் 104 பில்லியனர்களுடன் உள்ளது.
அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு: தமிழர்களின் திறமையை உலகறிய செய்த முதல்வர்