Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை...!! உச்சகட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!!

கண்டம் விட்டு கண்டம் பாயும்  ராக்கெட் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ ) தயாரித்துள்ளது . 
 

India success  in atomic rocket launcher test at visakapatinam  worldwide country stunning about India
Author
Delhi, First Published Jan 20, 2020, 2:59 PM IST

கடலுக்கடியில் இருந்தவாறு சுமார் 3500 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து இலக்கை தாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது .  இது பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .  எல்லையில் சீனா , பாகிஸ்தான்  உள்ளிட்ட  நாடுகளின் அத்துமீறல்களை சமாளிக்க இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .  உலகில் வலிமையான நான்காவது ராணுவத்தை வைத்துள்ள இந்தியா தன்னுடைய பாதுகாப்பையும் மேலும் தரம் உயர்த்த பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் ஆயுத தயாரிப்புகளிள் அதிக ஆர்வம் காட்டி வருகிறது .

India success  in atomic rocket launcher test at visakapatinam  worldwide country stunning about India

இந்நிலையில் கடலுக்கடியில்  நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது .  இந்தியாவிடம் ஏற்கனவே பி-02 நீர்மூழ்கி ஏவுகணை  உள்ளது ,  இந்த ஏவுகணை மூலம் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மட்டுமே தாக்க முடியும் ,  இந்நிலையில்  ஐஎன்எஸ் அரிஹந்த் போர்க்கப்பலில் இந்த வகை ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது .  தற்போது இந்த ஏவுகணையை காட்டிலும் ஐந்து மடங்கு தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆற்றல்கொண்ட அதாவது,   கண்டம் விட்டு கண்டம் பாயும்  ராக்கெட் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ ) தயாரித்துள்ளது . 

India success  in atomic rocket launcher test at visakapatinam  worldwide country stunning about India

அதாவது 3 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஏவுகணை ராக்கெட்  விசாகப்பட்டினம் கடற்பகுதியில் இருந்து  ஏவப்பட்டு அது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை  நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தாக்கி அழித்துள்ளது.  இதன்மூலம் இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது .  தற்போது வரை அமெரிக்கா ,  ரஷ்யா ,  மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே நீர்மூழ்கி கப்பலில் இருந்து  கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்துள்ளன.   தற்போது இந்த வெற்றியின் மூலம் இந்தியா இந்த நாடுகளில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது
 .

Follow Us:
Download App:
  • android
  • ios