வுஹானில் இருந்து வெளிவந்த கொரானா வைரஸை இயற்கையாக நடைபெற்ற சம்பவம் என்று சீனா கூறி வரும் நிலையில் அது நம்பும் படியாக இல்லை எனவும் அது ஒரு பயோ வெப்பன் என்று இந்தியா எடுத்து வைத்து கருத்துகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ரஷ்யாவும் நின்றுள்ளன. BTWC என்பது  Biological and Toxin Weapons Convention என்பது உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்களின் வளர்ச்சியை தடுக்கும் உலகளாவிய அமைப்பு.

இதன் 45 வது மாநாட்டில் கொரானா வைரஸ் பற்றி பேசிய இந்தியா பயோ வெப்பன்களை உருவாகவிடாமல் கட்டுப்படுத்துவதில் BTWC அமைப்பு தோல்வி அடை ந்துவிட்டது என்று கூறியுள்ளது. இதில் முக்கியவிஷயம் என்னவென்றால் கொரானா வைரஸ்பற்றி இந்த மாநாட்டில் எந்த ஒரு பேச்சும் விவாதமும் வரக்கூடாது என சீனா வரிந்து கட்டி நின்றது.

ஆனால், இந்தியா சீனாவை ஓரமாக உட்காருங்கள் என்று கூறி விட்டு கொரானா வைரஸ் பற்றியும் அது பயோ வெப்பனின் அடையாளம் என்றும் தன்னுடைய வாதங்களை எடுத்து வைத்தது. கொரானா வைரஸ் பற்றி எந்த ஒரு சர்வதேச அமைப்புகளிலும் விவாதம் வரக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து செயல்பட்டு வரும் சீனா ஐநா சபையின்  பாதுகாப்பு கவுன்சிலில் கூட இது பற்றிய
விவாதம் வர விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. 

ஆனால், சீனாவின் பல தடைகளையும் மீறி இந்தியா BTWC மாநாட்டில் கொரானா வைரஸ் பற்றியும் அதன் பாதிப்புகளை பற்றியும் எடுத்து வைத்து இது மாதிரியான உயிரியல் மற்றும் நச்சுக் கொல்லி ஆயுதங்கள் உருவாகாமல் தடுக்கஉருவான இந்த அமைப்பின் நோக்கம்என்ன? என்ன சாதிக்கப்பட்டது? என்று இந்தியா கேட்ட கேள்விகளுக்கு உலகநாடுகள் தரப்பில் இருந்து கிடைத்த ஆதரவினால் சீனா ஆடி விட்டது.
 

வழக்கமாக சீனாவுக்கு கொள்கை ரீதி யாக ஆதரவாக துணை நிற்கும் ரஷ்யா கூட இப்பொழுது இந்தியாவின் கருத்துகளுக்கு ஆதரவாக இருந்தது ஆச்சர்யம்தான். அதுவும் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்காவும் சீனாவுக்கு எதிராக நின்ற நேரத்தில் ரஷ்யாவும் துணையாக நின்றது உலக அதிசயம்தான்.

இது இந்திய பிரதமர் மோடியின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம் என்று கூறப்படுகிறது இந்தியா 1991 வரை சோவியத் யூனியன் பின்னால் நின்றது. அதற்கு பிறகு அமெரிக்க சார்பு நிலையை எடுத்தது. ஆனால் மோடி ஆட்சியில் தான் அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து இந்தியாவுடன் தோள்கோர்த்து நிற்கிறது. உலகின் வல்லரசுகள் என்று கூறப்படும் நாடுகள் கொரானாவினால் பாதிக்கப்பட்ட போதிலும் அதை சர்வதே அமைப்புகளில் கொண்டு செல்ல முடியாமல் முனங்கி நின்ற பொழுது சீனாவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா எடுத்து சென்றுள்ளது.

உலக சுகாதார மையத்தின் சீன ஆதரவு நிலைப்பாடு குறித்து இந்தியா வைத்த விவாதங்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் ஆதரவாக இருந்தது. இதனால் இனி வரும் அனைத்து சர்வதேச அமைப்பின் மாநாடுகளில் இந்த கொரானா வைரஸ் தான் இனி பிரதானமாக இருக்கும். இதனுடைய காரணம் தெரிய வெளிப்படையான விசாரணைக்கு சீனாவை உட்படுத்த வேண்டும் என்று உலக நாடுகள் ஐநா சபையில் எழுப்பும் கோரிக்கைகளினால் சீனா நிச்சயமாக உட்படுத்தபடும். இதனால், உலகளவில் சீனா தனிமைப் படுத்தப்படுவதால் இந்தியா தன்னுடைய நீண்ட நாள் கனவான ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா அடைய வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. 

சீனாவிற்கு எதிராக அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையில் இந்தியா சர்வதேச அமைப்புகளில் வெளிப்படையாக குற்றம்சாட்டி சீனாவிற்கு எதிராக முதல் அடியை எடுத்துவைத்துள்ளது. மேலும் இனி அடுத்தடுத்த சர்வதேச கூட்டங்களில் இந்தியா அதிரடியாக கொரோனா குறித்து பேசும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுவரை இந்தியாவில் அதிகமான உயிர் சேதங்கள் உண்டாகாத நிலையில் கடும் பொருளாதார முடக்கம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் வாரங்களில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் இந்தியா நேரடியாக களத்தில் இறங்கும் என்றும், சீனாவை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என்று தெரியவந்துள்ளது.