india rank in world peaceful countries
அமைதியான நாடுகள் பட்டியலில் 137-வது இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று, அமைதியான நாடுகள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த நிறுவனம் நடத்திய ஆய்வு பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம் பெற்றன. இந்த ஆய்வின்படி, இந்தியா 141-வது இடத்தில் இருந்து 137-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது...!
2017 ஆம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வினை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இதில் முதல் இடத்தை ஐஸ்லாந்தும், இரண்டாம் இடத்தை டென்மார்க்கும், மூன்றாம் இடத்தை ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.
இந்தியாவுக்கு 137 வது இடம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் 152-வது இடமும், ஆப்கானிஸ்தான் 162-வது இடமும் கிடைத்துள்ளன. ஆசிய நாடுகளான பூடான் 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. உள்நாட்டு போரால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி இலங்கை 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வங்கதேசம் 84-வது இடத்தைப் பெற்றுள்ளது.
