#UnmaskingChina: இனி சீனாவை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது...!! இந்தியா போட்ட மாஸ்டர் பிளான்..!!

மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய எரிசக்தி துறை சீனாவில் இருந்து இனி எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது என அத்துறைக்கான மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்துள்ளார். 

India plan to evacuate china industries from Indian tenders

இந்தியா-சீனா இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் நாட்டில் பல்வேறு துறைகளில் சீனப் பொருட்களின் ஆதிக்கத்தை  குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மத்திய எரிசக்தி துறை சீனாவில் இருந்து இனி எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது என அத்துறைக்கான மத்திய அமைச்சர் ஆர்.கே சிங் தெரிவித்துள்ளார். எனவே இரு நாட்டுக்கும் இடையேயான எல்லை மோதல் இந்திய-சீன வணிகப்போராக மாறியுள்ளது. இந்திய-சீன எல்லையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு இந்தியா தகுந்தபடி பதிலளித்து வரும் நிலையில், ஒன்றிணைந்து செயல்பட தயாரென ஒருபுறம் சீனா அறிவித்துவிட்டு, மற்றொரு புறம்  எல்லையில் தொடர்ந்து  படைகளை குவித்து வருகிறது. இது இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

India plan to evacuate china industries from Indian tenders

ஒரு புறம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா, மறுபுறம் இந்திய பகுதிகளை உரிமைகொண்டாடி பகைபாராட்டி வருவதால் அந்நாட்டிற்கு சரியான பாடம் புகட்ட இந்தியா முடிவுசெய்துள்ளது. அதன் ஒருபகுதியாக நாட்டின் பல துறைகளில்  சீன பொருட்களின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில் இந்திய எரிசக்தி துறையிலும் அதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த எரிசக்தித்துறை முன்வந்துள்ளது.  இது குறித்து தெரிவித்துள்ள அத்துறை அமைச்சர் ஆர்.கே சிங்,  இனி சீனாவிடமிருந்து எந்த விதமான எரிசக்தித்துறை சார்ந்த  பெருட்களையும் இறக்குமதி செய்யமாட்டோம் எனக் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த வீடியோ கான்பரசிங் மூலம் அத்துறை  அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், எரிசக்தித் துறையில்  சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கூறினார். கடந்த 2018 -19 ஆம் ஆண்டுகளில் மட்டும் எரிசக்தி துறைசார்பில் 71 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் 21,000 கோடி ரூபாய் அளவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இனியும் இதை நாம் அனுமதிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். 

India plan to evacuate china industries from Indian tenders

மேலும் பேசிய அவர், எல்லையில் நம் வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி,  நம் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நாட்டிலிருந்து நாம் இனி எந்த பொருட்களையும் இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது. நாம் இறக்குமதி செய்து அதன்மூலம் அந்நாட்டிற்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை நாம் ஊக்குவிக்க வேண்டுமா?  எனவே இனி யாரும் சீனாவிலிருந்து எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறுத்துகிறோம், இப்பட்டியலில் சீனாவைப் போலவே பாகிஸ்தானும் உள்ளன, சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மாநில அரசுகளையும் நாங்கள்  இனி அனுமதிக்க மாட்டோம்வும் எனவும்  அவர் கூறினார். ஏற்கனவே 59 சீன கைப்பேசிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  தரவு மற்றும் தனியுரிமை பாதுகாப்பை மேற்கோள்காட்டி சீனா செயலிகளுக்கு அதிரடி தடைவிதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தொலைத்தொடர்பு துறையில் சீன நிறுவனங்களின் உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர நாட்டின் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களில் இருந்தாலும் சீன நிறுவனங்களை வெளியேற்றுவது குறித்துகருத்துக்கள் எழுந்துள்ளது.

India plan to evacuate china industries from Indian tenders

அதேபோல் நெடுஞ்சாலை திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க இந்தியா அனுமதிக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் சீன முதலீட்டாளர்கள்  முதலீடு செய்யாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios