ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத்  தணிக்க இந்தியா முன்வரவேண்டும் என இந்தியாவுக்கான ஈரான் தூதர்  அலி செகேனி கூறியிருக்கிறார் ஈரான் ராணுவ தளபதியான காசின் சுலைமானி அமெரிக்க விமானப்படை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.  அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்  நடத்தியுள்ளது இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது மேற்காசியாவில் மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .  இந்த நிலையில் அமெரிக்கா ,  ரஷ்யா , பிரான்ஸ் , ஜெர்மனி உள்ளிட்ட 28 க்கும் அதிகமான நாடுகள் ஈரான் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள சண்டை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர் . 

அதில்,   கடந்த 2008ஆம் ஆண்டு கொண்டு வந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஈரான் தெரிவித்துள்ள நிலையில்   தற்போது இரு நாட்டுக்கும் இடையேயான மோதல்  அணு ஆயுத போராக மாறிவிடக்கூடாது என்ற கவலையில் உலகநாடுகள் ஆண்டு உள்ளது .  இந்நிலையில்  சுலைமானியின்  இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர் அப்போது சுலைமானியின்  உயிரிழப்புக்கு நிச்சயம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் இதற்கு அமெரிக்கா நிச்சயம் வருந்தும் நிலை வரும் என ஈரான் எச்சரித்திருந்தது .  

இந்நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி தங்களது ராணுவ பராக்கிரமத்தை காட்டி வருகின்றனர் .  இதனால் இரு நாடுகளும் போரில் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது .  இரு நாட்டுக்கும் இடையே போர் வெடித்தால் அது உலக நாடுகளை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது.  எனவே இந்தப் போரை தடுக்க உள்ள வழிவகைகள் குறித்து சர்வதேச நாடுகள் ஆராய்ந்து வருகின்றன . இந்நிலையில் டெல்லி ஈரான் தூதரகத்தில் காசிம் சுலைமானிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது , அதில் பேசிய ஈரான் தூதர் அலி செகேனி,  உலக  அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது .

ஈராக்கில் உள்ள  அமெரிக்க ராணுவ நிலை மீது  ஈரானின் தாக்குதல்  தற்காப்புக்கானதேயொழிய அமெரிக்காவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல என்றார்.  எப்போதும் ஈரான் சமாதானத்தையே  விரும்புகிறது போரை அல்ல என்றார்.  ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரோதப் போக்கு மேலும் அதிகரிக்காது என நம்புகிறோம்,  இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க எந்த நாடுகளில் இருந்து   முயற்சிகள் வந்தாலும் அதை  ஈரான் வரவேற்கிறது என்றார்.  குறிப்பாக இந்தியா எங்களுக்கு நல்ல நண்பனாக உள்ளதால் போர் பதற்றத்தை இந்தியா அனுமதிக்காது என நம்புகிறோம் என்றார்.