இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..!

இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

india, China No Longer Developing Nations... Donald Trump

இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று  கூட  விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு  வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால், இருநாடுகளும் மறைமுக வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளன.

 india, China No Longer Developing Nations... Donald Trump

இந்நிலையில், அங்கு பென்சில்வேனியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் “இந்தியாவும், சீனாவும் ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளாக திகழ்கின்றன. அவர்களை இனி வளரும் நாடுகள் என கூற முடியாது. எனவே அவர்கள் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெற முடியாது” என கூறினார். india, China No Longer Developing Nations... Donald Trump

மேலும், “அவர்கள் வளர்ந்து வரும் நாடுகள் என்ற வகையில் உலக வர்த்தக அமைப்பிடம் இருந்து நன்மைகளை பெறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பாதகமாக அமைகிறது. அவர்கள் ஆண்டாண்டு காலமாக நம்மிடம் இருந்து நன்மைகளை அனுபவித்து வருகின்றனர். உலக வர்த்தக அமைப்பின் விதிகளில் உள்ள  ஓட்டைகளை, பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்த நாடுகள் பயன்படுத்தினால்  அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios