இந்தியாவுக்கு தற்போது அவசர தேவை ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யுவதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்கின்றனர். எனவே சீனா மற்றும் தென் கொரியாவிடம் இருந்து பொருட்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக முகமுடி வென்டிலேட்டர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிக்க தென்கொரியா சீனா போன்ற நாடுகளிடமிருந்து அவைகளை கொள்முதல் செய்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . இதுகுறித்து அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே சீனாவிடமிருந்து முகக் கவசம் வாங்கிய ஐரோப்பா , சீனாவின் முகக் கவசங்கள் தரமானதாக இல்லை என குற்றம் சாட்டியது, ஆதாவது வைரஸ் கிருமியை வடிகட்டும் அளவிற்கு சீன முகக் கவசங்கள் தரமானதாக இல்லை என குற்றம் சாட்டியது . இந்நிலையில்தான் சீனாவிடம் இருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்கள் கையுறைகள் போன்றவற்றை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது . இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசுக்கு 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 பேர்உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் மேலும் 1.3 பில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது , இந்நிலையில் அதிகளவில் மருத்துவ உபகரணங்கள் தேவை ஏற்பட்டுள்ளது, இதற்காக உள்நாட்டு உற்பத்தியாளர்களை நம்பினால் அதற்கு காலதாமதம் ஏற்படும் என்பதினால் , தென்கொரியா சீனா போன்ற நாடுகளிடமிருந்து மருத்துவ உபகரணங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் தரம் குறைந்ததாக உள்ளது என நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் சமீபத்தில் குற்றச்சாட்டின, ஆகவே அக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு துறை அமைச்சகம் , கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சீனா இப்போதுதான் மெல்ல மெல்ல உற்பத்தியைத் தொடங்கியுள்ளது . ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இரவு பகலாக மருத்துவ உயகரணங்கள், முகக் கவசங்கள் கையுறைகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் .
இது வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு உதவும் நோக்கில் செய்யப்படுகிறது . ஆகவே பொருள்களின் தரம் குறைவு என்ற புகாரை சீனா ஏற்கிறது, அது விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதை மேற்கோள் காட்டும் இந்தியா அதிகாரிகள் , இந்தியாவுக்கு தற்போது அவசர தேவை ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்யுவதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவிக்கின்றனர். எனவே சீனா மற்றும் தென் கொரியாவிடம் இருந்து பொருட்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக இந்திய அதிகாரிகள் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவுக்கு 38 மில்லியன் முககவசங்களும் , சுமார் 6.2 மில்லியன் கையுறைகள் மற்றும் உடற் கவசங்கள் தேவைப்படுகிறது எனவே இவை அனைத்தும் சீனாவிலிருந்து விரைவில் கொள்முதல் செய்யப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 1, 2020, 3:45 PM IST