Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் எல்லையில் இந்தியா தாக்குதல் - தீவிரவாத பதுங்கிடங்கள் அழிப்பு...

India attacked Pakistan border the destruction of extremist hacks
India attacked Pakistan border the destruction of extremist hacks
Author
First Published May 23, 2017, 3:35 PM IST


சர்ஜிக்கல் ஸ்டிரைக்கைப் போன்று பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்ஹாம் பகுதியில் கடந்த 4 தினங்களில் 8 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

தீவிரவாதிகளுடனான இச்சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 

எல்லையில் பனி உருகியதன் காரணமாக தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய ஏதுவான இடமாகக் கருதப்படும் ரஜோரி, நவ்ஷேரா ஆகிய பகுதிகளில் உள்ள பதுங்குக் குழிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நீண்ட தூரம் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் வல்லமை படைத்த பீரங்கிகளைக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. தீவிரவாதிகள் ஊடுருவ துணை புரியும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் அசோக் நடுலா தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios