இந்தியாவிற்கு துப்பாக்கியால் பதில் சொல்லுங்கள்..!! இம்ரான்கான் வெறிப் பேச்சு..!! தீவிரவாதிகளை தூண்டும் சதி..!!
ஒருகட்டத்தில் காஷ்மீர் மக்களை பார்த்து உங்களுக்கு உணர்வு இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர். காஷ்மீரிகளே உங்கள் சகோதரர்களை மீட்க ஒவ்வொருவரும் துப்பாக்கிளை கையிலெடுங்கள், எல்லையை நோக்கி புறப்படுங்கள் என்று ஆவேசமாக கூறினார்
இந்தியாவிற்கு எதிராக நேற்று பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் , தீவிரவாதத்தை தூண்டும் வகையில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் உரையாற்றியுள்ளார் அவரின் பேச்சு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் அதை முழுவதுமான இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது . இந்தியாவின் இந் நடவடிக்கையை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான், இந்தியாவை கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தும் வேலைகளிலும் முழுமையாக ஈடுபட்டுவருகிறது பாகிஸ்தான் . தன் உற்ற நண்பனான சீனாவின் உதவியுடன் ஐநா மனித உரிமைகள் ஆணையம்வரை சென்று இந்தியா மீது புகார் கொடுத்துள்ளதுடன். அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், போன்ற நாடுகளையும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி கோரி வருகிறது பாகிஸ்தான் . ஆனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் அதில் தலையிட விரும்பவில்லை என கூறி அந்நாடுகள் விலகிக்கொண்டன.
இந்நிலையில் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் விசாரணைக்கு வர உள்ளது, அதற்குள் இந்தியாவிற்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முயற்ச்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்தி அதை ஆதாரமாக ஐநா மன்றத்தில் சமர்பிக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது . எனவே தன்ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களை திரட்டி அதன் தலைநகர் முசாபராபாத்தில் பிரமாண்ட பேரணி நடத்த பிரதமர் இம்ரான் கான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பேரணிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்த நிலையில் மிகுந்த எதிர்பார்பிற்கிடையில் நேற்று பேரணியும் நடைபெற்றது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதற்கு தலைமைதாங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பேரணியில் கூட்டம் கலைகட்டவில்லை, ஏற்கனவே பல்வேறு காரணங்களால் அரசின் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் பேரணியை புறக்கணித்ததே அதற்கு காரணம், இதனால் பேரணி உற்சாகமிழந்து காணப்பட்டது இந்தியாவின் மீது பழிபோட ஏற்பாடு செய்யப்பட்ட போரணி பிசுபிசுத்து போனதால் மனதளவில் உடைந்துபோனார் இம்ரான்கான். இதனால் கோபம் கொப்பளிக்க அவர் உரையாற்றினார், பேச்சில் அனல் தெரித்தது. எடுத்த எடுப்பிலேயே மோடியையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் தாக்கினார். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவது மனிதாபிமான அடைப்படையிலானது என்றார்.
மோடிக்கு சிந்திக்கும் ஆற்றல் குறைவு என்பதால் காஷ்மிரில் அவர் ஈவு ஈறக்கமின்றி நடந்து கொள்கிறார் . அவரின் செயலால் கடந்த 40 நாட்களாக காஷ்மீர் மக்கள் உணவு உறக்கிமின்றி தவித்து வருகின்றனர் என்றார். காஷ்மீர் விவகாரத்தில் மோடியின் நடவடிக்கை ஒருபோதும் வெற்றிபெறாது என எச்சரித்தார். ஒருகட்டத்தில் காஷ்மீர் மக்களை பார்த்து உங்களுக்கு உணர்வு இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர். காஷ்மீரிகளே உங்கள் சகோதரர்களை மீட்க ஒவ்வொருவரும் துப்பாக்கிளை கையிலெடுங்கள், எல்லையை நோக்கி புறப்படுங்கள் என்று ஆவேசமாக கூறினார், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்தது. சர்ச்சைக்குரிய அவரின் பேச்சுக்கு சர்வதேச அளவில் கண்டணங்கள் எழுந்துள்ளது.