அதை மட்டும் கொடுத்துடாதீங்க... மோடி எங்களை சல்லி சல்லியா தொலைச்சுக் கட்டிடுவாரு... கதிகலங்கும் பாகிஸ்தான்..!

நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் கட்டுபாட்டில் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அச்சம் தெரிவித்துள்ளார். 
 

imran khan tweet about indias nuclear weapon

நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் கட்டுபாட்டில் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அச்சம் தெரிவித்துள்ளார்.

 imran khan tweet about indias nuclear weapon

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வாஜ்பாயின் நினைவு நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொக்ரானில் அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அணு ஆயுத சோதனை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது. ஆனால், எதிர்கால சூழலுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்’ என்று தெரிவித்து இருந்தார்.  imran khan tweet about indias nuclear weapon

ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது. ஏற்கனவே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததால், பாகிஸ்தான் கடுப்பில் உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரித்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அணு ஆயுத கொள்கையில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ராஜ்நாத் பேசியது, பாகிஸ்தானை எச்சரிப்பதாக உள்ளது. 

இந்நிலையில், மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’பாசிச, இந்து மேலாதிக்கம் உள்ள மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால் அது பாதுகாப்பாக இருக்காது. உலக நாடுகள் இதில் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும். இது வெறும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள பிரச்னை அல்ல. இந்த பிரச்னை உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

 imran khan tweet about indias nuclear weapon

ஏற்கனவே 40 இஸ்லாமிய மக்கள், கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் வெறிபிடித்தாற் போல் உள்ளனர். உலக நாடுகள் இப்போதே இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். இல்லையென்றால் இது மேலும் பரவும்’ என அவர் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios