இம்ரான் கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம், லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டை முற்றுகையிட்டனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் மற்றும் லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டிற்குள் புகுந்தனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் லாகூர் கான்ட்டில் உள்ள கார்ப்ஸ் கமாண்டர்ஸ் இல்லத்தின் வீட்டிற்குள் புகுந்தனர்.

Scroll to load tweet…

ஐஎஸ்ஐ தலைமையகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியபோது இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்களில் ஒருவர் கூறினார். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அல்-காதர் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்