பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார். புல்வாமா தாக்குதல் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில், இந்தியாவின் இரண்டு மிக் ரக போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது. தற்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் அபினந்தன் சிக்கியுள்ளார். இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தையும், பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். 

போர் ஆரம்பித்துவிட்டால் அதனை முடிப்பது இருநாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது. தீவிரவாதம் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் பேச பாகிஸ்தான் தயாராக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறித்து இம்ரான் கான் விளக்கமளித்துள்ளார். உலகில் நடந்த அனைத்து போர்களுமே தவறாக கணிக்கப்பட்டவை. மேலும் தீவிரவாதம் குறித்து பேச இந்தியா விரும்பினால், அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு இரு நாடுகளுக்கு இடையே நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும் என்றார். 

இந்நிலையில் தமிழக வீரர் அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய உள்ள நிலையில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவு, பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.