shocking news...!! தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் பலன் இல்லை..!!
அதாவது ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட கொரோனாவை உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியாது.
கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அவ்வளவு எளிதில் இந்த வைரஸ் உலகை விட்டு நீங்காது எனவும், இது மக்களை பரவலாக பாதிக்கும் நோயாக இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். வெகுஜன சமூகத்தில் தட்டம்மை, எச்ஐவி, சிக்கன் பாக்ஸ், போன்ற நோய்கள் எப்படி பரவியுள்ளதோ அதுபோல கொரோனாவும் நிலைத்திருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது, இதுவரை உலக அளவில் 58 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 57 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸால் வல்லரசான அமெரிக்கா நிலைகுலைந்து போயுள்ளது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இந்த வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை இந்த வைரஸ் கபளீகரம் செய்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகமே போராடி வரும் நிலையில் அது கட்டுக்கடங்காமல் கொடூர முகத்தை காட்டிவருகிறது.
ஒரு பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என பலரும் கூறி வருகின்றனர், வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்க சர்வதேச அளவில் சுமார் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன, நூற்றுக்கணக்கான மருந்துகள் ஆராய்ச்சி மட்டும் சோதனைக் கட்டத்தை எட்டியுள்ளன. கொரோனாவை கொல்லும் சிறந்த தடுப்பூசிக்காக மக்கள் காத்திருக்கும் இந்நேரத்தில், ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட கொரோனாவை உலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க முடியாது. எச்ஐவி, தட்டம்மை, சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்களைப் போல சமூகத்தில் தொடரும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த உலகம் முடிவற்ற கொரோனா வைரஸ் கலந்த உலகமாக இருக்கும் என்றும், இப்போது போல எப்போதும் இந்த வைரஸ் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வைரசாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏற்கனவே நான்கு வகையான கொரோனா வைரஸ் மனித சமூகத்தில் புழக்கத்தில் உள்ளன, அதனால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் ஏற்படுகிறது அந்த வரிசையில் கொரோனாவும் ஐந்தாவது வைரசாக இடம்பிக்கும் என கூறப்படுகிறது. மனித சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பரவுவதால் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் லேசானதாக மாறும், காலப்போக்கில் நம் உடல் அந்த வைரசை மாற்றி அமைக்கும், தற்போதைக்கு பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படவில்லை சில பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆரம்பத்தில் இந்த வைரஸை வெற்றிகரமாக எதிர்கொண்டு அது கட்டுப்படுத்திய நாடுகளில்கூட சமீபத்திய வாரங்களில் அந்த வைரஸ் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் இந்த வைரஸ் எளிதாக உயிர் வாழ முடிகிறது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் மற்றும் பரிணாம உயிரியலாளர் சாரா கோபி கூறியுள்ளார்.
அதேபோல் இந்த வைரஸை முற்றிலுமாக ஒழிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த வைரஸை ஒரு சில நாட்களில் ஒழித்துக்கட்டும் ஆயுதத்தைத் ஆராய்ந்து வருகின்றனர், ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை கூற முடியாது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புளோரிடா பல்கலைக்கழகத்தின் நோயியல் உயிரியலாளரான நடாலி டீன் கூறுகையில், இந்த கொரோனா வைரஸ் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் ஒரு இயல்பான எதிர்காலம் என்பது கேள்விக்குறியே, இந்த வைரஸை ஒழிப்பதற்கு என்ன வழி என ஆராய்ந்து அதற்கான கண்டுபிடிப்புகளை அதிகப்படுத்தும் போது வைரஸிலிருந்து நம் வாழ்க்கையை மீட்டெடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.