கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கினால் அது அவரது உடலில் எத்தனை நாட்கள் வீரியத்துடன் இருக்கும் என சீன மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.   ஒருவருக்கு வைரஸ் தாக்கிய  20 நாட்களுக்குப் பின்னரே அதன் அறிகுறிகள் வெளிப்படும் என்ற அதிர்ச்சித் தகவலையும் அம்மருத்துவர்கள்  வெளியிட்டுள்ளனர்.   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது .  உலக நாடுகள் முழுவதும் கொரோனா பீதியில் உறைந்துள்ளன.    குறிப்பாக ஜப்பான் ,  இத்தாலி ,  ஈரான் ,  உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ளது . 

 

இதுவரை  உலக அளவில் சுமார் 7200 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரை இந்த வைரஸ் தாக்குதலை தடுக்க முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால்  உயிரிழப்புகள் தொடர்கிறது .  இதுவே மக்களின் அச்சத்திற்கும் முக்கிய காரணமாகவும் உள்ளது இந்நிலையில் இந்தியாவிலும் பிற வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது .  இதுவரையில் இந்தியாவில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார்  120 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதனால் மக்கள் உச்சகட்ட பீதியில் உள்ளனர் .  இந்நிலையில் கொரோனா  ஒருவரை தாக்கினால் ,  அந்த வைரஸ் அவரது உடலில் எத்தனை நாட்கள் வரை உயிருடன் இருக்கும் என்பதை சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர் . 

ஒருவரைக் கொரோனா பாதித்தால் அவரிடம் குறைந்த பட்சம் 31 நாட்கள் வரை அந்த வைரஸ் வீரியத்துடன் இருக்கும் என்றும் , அந்த வைரஸ் தாக்கிய 20 நாட்களுக்கு பிறகே அதன் அறிகுறிகள் தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர் . கொரோனா அறிகுறி தெரிந்த பின்னர் 20 நாட்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் .  வைரசால் பாதிக்கப்பட்டவர் அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர சில  நாட்கள் ஆகும் எனவும்  சீன மருத்துவர்கள் கூறியுள்ளனர் .  மேலும் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமாகிய பிறகும் ஓரிரு நாட்களுக்கு அந்த வைரஸ் தாக்கம் உடலில் இருக்கும் என்றும் சீன மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.