பாகிஸ்தான் மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளி தப்பி ஓடாமல் இருக்க கட்டிப் போடப்பட்ட நிலையில் அழுது துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

 பாகிஸ்தானில் வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 1,495 தாண்டிய நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், லாகூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து அந்த வீடியோ வெளிவந்துள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் ஒரு நோயாளியை ஓடவிடாமல் படுக்கையில் கட்டி வைத்துள்ளனர்.

 இந்த நபர் உதவிக்காக தொடர்ந்து அழைக்கிறார். ஊழியர்கள் எவரும் கேட்கவில்லை. இந்த நபர் உயிரிழந்தார். கொரோனா நோயாளியின் இந்த வேதனையான சம்பவம் வீடியோவில் காண முடிகிறது. இந்த வீடியோ பதிவை பாகிஸ்தான் பத்திரிக்கையார் நைலா இனாயத்  என்பவர் ட்வீட் செய்துள்ளார். நோயாளியின் மர்மம் குறித்து விசாரணைக்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்த சில கடினமான முடிவுகளை அறிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்காது என்பதற்கு  எந்த உத்தரவாதமும் இல்லை. நிலைமையை மேம்படுத்த மற்ற நாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களை உதவியும் தேவை. ஈரானில் இருந்து வந்த வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் திபான்எல்லையில் குறைவான வசதிகளுடன் இருப்பது கவலையளிக்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.