இரண்டு கைகளையும் கட்டிலில் கட்டி வைத்துவிட்டு தன்னுடன்  உடலுறவு கொண்டதாக பிரபல ஹாலிவுட்  இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் கூறியுள்ளார் .  குற்றம்சாட்டப்பட்டுள்ள இயக்குனர் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்களை அவர்களின்  விருப்பத்திற்கு மாறாக வலு கட்டாயப் படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டதாக அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன .  சினிமா துறை என்றாலே இயக்குனர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது சகஜம் தான் என்ற நிலை  உருவாகி வருகிறது . 

 

இந்நிலையில்  நியூயார்க் ஹார்வி  வெய்ன்ஸ்டீன் என்ற ஹாலிவுட் இயக்குனர் மீது பிரபல நடிகைகள் 80க்கும் மேற்பட்டோர் அடுக்கடுக்காக புகார் கூறி வருகின்றனர் .  கொடுக்கப்பட்ட புகார்கள்  நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது .  அதில் ஹார்வி  வெய்ன்ஸ்டீனால்  பாதிக்கப்பட்ட பெண்கள்  அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர் .  அதில் அன்னபெல்லா சியோரா  என்ற நடிகை ஹார்வி  வெய்ன்ஸ்டீன் இயக்கிய படத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடித்தபோது  தன்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார் .அப்போது தான் மேக்கப் ரூமில் இருந்தபோது தனக்கு பின்னாள் வந்த இயக்குனர் ஹார்வி  வெய்ன்ஸ்டீன் தன் வாயை பொத்தியதுடன்  அங்கிருந்த கட்டிலில் எனது இரண்டு கைகளையும் கட்டிப்போட்டு  ஆடைகளை அவிழ்த்து நிர்வாண படுத்தினார்.

 

அவரிடமிருந்து தப்பிக்க தான் போராடியபோது அவர் என் மேலே படுத்து உடலுறவு கொண்டார்,  அவரை என்னால் தடுக்க முடியவில்லை என நடிகை  அன்னபெல்லா சியோரா  குற்றச் சாட்டினார் .  அப்போது வழக்கு விசாரணையை கவனித்துக் கொண்டிருந்த இயக்குனர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் அந்த நடிகை தன்மீது கூறிய குற்றச்சாட்டை கூலாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் .  67 வயதான  ஹார்வி  வெய்ன்ஸ்டீன் மீது மிமி ஹோலி , மற்றும் ஜெசிக்கா மான் என்ற  இரண்டு நடிகைகளை பலாத்காரம் செய்த  குற்றச்சாட்டில் தான் குற்றவாளி இல்லை  என்றும் , அந்த  நடிகைகள் உடனான பாலியல் உறவுகள் அனைத்தும் அவர்களின் சம்மதத்துடன் நடந்தது என்றும் அவர் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார்.