சர்வாதிகாரி ஹிட்லரின் சுயசரிதையை விளக்‍கும் மெயின் கேம்ப் புத்தகம், ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

அடால்ப் ஹிட்லர்... உலக சரித்திரம், நடுக்‍கத்தோடு உச்சரித்த பெயர். ஜெர்மனியின் நாசிக்‍ கட்சியின் தலைவராக விளங்கி, 1934-ம் ஆண்டு அந்நாட்டின் தலைவரானார்.

சர்வாதிகாரி என்ற சொல்லுக்‍கு 100 விழுக்‍காடு பொருத்தமாக செயலாற்றிய ஹிட்லர், ஆரம்பத்தில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்து, 1923-ம் ஆண்டு திடீர் புரட்சியில் ஈடுபட்டார்.

புரட்சி தோல்வியில் முடிந்ததால், கைது செய்யப்பட்ட அவர், சிறையில் இருக்‍கும்போது மெயின் கேம்ப் என்ற சுயசரிதையை எழுதினார். ​

ஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்‍கும் வகையிலான இந்தப் புத்தகம், முதலில் 1920-ம்  ஆண்டு வெளியிடப்பட்டது. அடுத்த ஆண்டே 2-ம் பதிப்பு வெளியிடப்பட்டது.

1945-ம் ஆண்டு வரை ஒரு கோடி பிரதிகள் அச்சிடப்பட்ட நிலையில், தற்போது புத்தகத்தின் 6-ம் பதிப்பு அச்சில் உள்ளது. இந்நிலையில், மெயின் கேம்ப் புத்தகம் ஜெர்மன் நாட்டில் அதிக அளவில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக அதன் பதிப்பாளர் Andreas Wirsching தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான புதிய உரை விளக்‍கத்துடன் கூடிய மெயின் கேம்ப் புத்தகத்தில் 85 ஆயிரம் பதிப்புகள் விற்பனையாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.