இந்துக்களாக மாறும் கிறிஸ்துவர்கள்.. ஆப்பிரிக்காவில் அசுர வேகமெடுக்கும் மதமாற்றம்.. திருமண சடங்கிலும் அசத்தல்.!
ஆப்பிரிக்க மக்கள் மெதுவாக இந்து மதத்தை ஏற்கத் தொடங்கி உள்ள நிலையில் திருமணத்தையும் இந்துக்கள் முறைப்படி நடத்தி வருகின்றனர்.
ஆப்பிரிக்க மக்கள் மெதுவாக இந்து மதத்தை ஏற்கத் தொடங்கி உள்ள நிலையில் திருமணத்தையும் இந்துக்கள் முறைப்படி நடத்தி வருகின்றனர்.
உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன. இந்து மக்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் உலகின் எல்லா நாடுகளிலும் காணமுடிகிறது. கிட்டத் தட்ட 100 கோடி இந்துக்கள் உலகின் எல்லா பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், கானா மேற்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய நாடு அதன் தலைநகர் அக்ரா ஒரு அழகிய கடற்கரை நகரம். அந்த நகரின் வடக்குபகுதியில் சர்ச் கோபரங்களைப் போல கூரான உயர்ந்த வெள்ளைக் கோபுரம். அதன் உச்சியில் ஒளிரும் ஒம் சின்னம். உள்ளே சன்னதியில் விக்கிரகங்களுக்குப் பட்டாடை. அருகில் சிறு விளக்குகள். மாலை பூஜைக்கு முன்னதாகப் பிராத்தனைப் பாடல்கள்.
இந்தியர் வாழும் ஒரு வெளிநாட்டில் அவர்களுக்காக ஒரு இந்து கோவில் இருப்பதும் அதில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவதும் ஆச்சரியமான செய்தி இல்லை. ஆனால், இந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்?
கானா நாட்டின் ஜனத்தொகை 2.3 கோடி. அதில் 60% கிருத்துவர், 15% முஸ்லீம்கள், 25% ஆப்பிரிக்கப் பழங்குடி மதத்தின் வம்சாவளியினர். எல்லா காலனிகளையும்போல ஆங்கில ஆதிக்கத்தின் துணையுடன் மதமாற்றத்தால் கிறுத்துவ மதம் பரவிய நாடு அது. அதில் ஒரு சாதாரண விவசாய குடும்பத்திலில் 1937ல் பிறந்த கெவிஸி ஈஸெல் தாய் கிறுத்துவர். உண்மையை அறிய கெவிஸி மேற்கொண்ட நீண்ட பயணத்தில் 1962ல் ரிஷிகேஷிலுள்ள சிவானந்த ஆஸ்ரமத்துடன் தொடர்புகொண்டார். இந்துவழி பிராத்தனைக்காக சங்கம் ஒன்றை ஆப்பிரிக்காவில் ஏற்படுத்தினார். இந்தியாவிற்கு 1970ல் வந்து ஆன்மீகத் தேடலில் அவர் அடைந்த இடம் ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமம்.
இரண்டாண்டு தீவிர பயிற்சிக்குப் பின்னர் இந்தியாவிலிருந்து தாய் நாடு செல்லும்போது இந்து மதத்தை ஏற்றுகொண்டவர். தன் நாட்டின் தலைநகரில் இந்து மதம் பற்றி சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார். துவக்கத்தில் படித்தவர்கள் மட்டுமே கலந்துகொண்ட கூட்டங்களுக்கு நாளடைவில் எல்லா தரப்பு மக்களும் வர துவங்கினர். 1975ல் இந்தியாவிலிருந்த கானா வந்த ஸ்வாமி கிருஷ்ணாநந்த ஸரஸ்வதி இவருக்கு தீட்சை வழங்கி ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி எனப் பெயரிட்டு ஆப்பிரிக்க இந்து ஆஸ்ரமத்தை துவக்க உதவி செய்து, பணியை தொடரச் சொல்லிவிட்டு இந்தியா திரும்பிவிட்டார்.
ஆச்சரியமான விஷயம் கிருஷ்ணானந்த ஸரஸ்வதிக்கு இவரை முன்பின் தெரியாது. அவர் கானா வந்ததும் வேறு பணிக்காக. அன்று முதல் இந்த ஆஸ்ரமத்தின் தலைமைத் துறவியாகயிருந்து இந்து மதத்திற்கு தொண்டாற்றி வருகிறார் ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி. கானாவில் இருப்பது 12, 500 இந்துக்கள். இதில் 10, 000 பேர் இவரைப்போல ஆப்பிரிக வம்சாவழி சார்ந்தவர்கள்.
இவருடைய இந்த ஆஸ்ரம உறுப்பினர்களாகச் சேர்ந்த பல மதத்தினரும் இந்துவாகி இருக்கிறார்கள். “யாரையும் இந்து மதத்திற்கு மாற்றமுடியாது. ஏனெனில், மற்றதைப்போல அது வெறும் மதமில்லை. அது ஒரு வாழ்க்கை முறை. ஒருவார பயிற்சிக்குப் பின்னர் இந்துவாக வாழ விரும்புவர்களை ஏற்று தொடர்ந்து இந்துவாக வாழ அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்கிறார் சுவாமி. இந்து விழாக்கள், பண்டிகைகள் பற்றிய விளக்கங்கள் பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாவே கூட்டங்களில் விளக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. முக்கியமான விஷயம் கூட்டங்களும் பாடல்களும் உள்ளூர் மொழியில் தான்.
தங்கள் குழந்தைகளுக்கு ராமர், கிருஷ்ணர் எனப் பெயர் சூட்டி மகிழும் இந்த “இந்து”க்களில் பலருக்கு கிருத்துவப் பெயர்தான். இறந்தபின் உடலை ஏரியூட்டுவது என்பதை எற்றுகொண்ட இந்துகளுக்கு இறுதிக் கடன்களை செய்கிறது இந்த ஆஸ்ரமம். நாட்டின் பிற நகரங்களில் 5 கிளைகளுடன் இயங்கும் இவர்களுக்கு உள்ளூர் இந்தியர்களின் கோவில்களிலிருந்து நல்ல ஒத்துழைப்பு இல்லை என்பது தான் வருத்தம். எங்கோ ஆப்பிரிக்காவில் வேறுமதத்தினராக பிறந்து இந்தியா வந்து இந்துமத பெருமையை உணர்ந்து அதை தன் தாய்நாட்டில் வேறூன்றச் செய்யும் இந்த ஸ்வாமி கானானந்த ஸரஸ்வதி இந்து மதத்தின் ஒரு பெருமையான அடையாளமாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஆப்பிரிக்க மக்கள் மெதுவாக இந்து மதத்தை ஏற்கத் தொடங்கி அதை கடைபிடிக்கத் வரும் நிலையில், தற்போது இந்து மதம் முறைப்படியும் திருமணம் செய்து வருகின்றனர்.