உலகமே மிகவும் எதிபார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், முதற்கட்டமாக நியூ ஹம்ப்ஸைர் மாகாணத்தின் டிக்ஸ்வில்லி நோட்ச் மற்றும் மில்ஸ்பீல்டு ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், டிக்ஸ்வில்லி நோட்ச் பகுதியில் ஹிலாரி 4 வாக்குகளையும், டிரம்ப் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஹர்ட் பகுதியில் ஹிலாரி 17 வாக்குகளும், டிரம்ப் 14 வாக்குகளும் பெற்று ஹிலாரி முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே, மில்ஸ்பீல்டு பகுதியில் டொனல்ட் டிரம்ப் 16 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், ஹிலாரி 4 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதால் யார் வெற்றி பெறுவார் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
