அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் உள்ள 9 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இதில் ஆளும் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வாக்குப்பதிவு தொடங்கும் 6 மணி நேரம் முன்பு வரை நார்த் கரோலினா மாநிலத்தில் இறுதிக்கட்டபிரசாரம் செய்தார்.

அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு நியூயார்க்கில் நகருக்கு வந்த ஹிலாரி கிளிண்டன், தனது கணவர் பில் கிளிண்டனுடன் இணைந்து சென்று நகரில் உள்ள சப்பாகுவா பகுதி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். காலை 6 மணிக்கே அங்கு மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் நின்று இருந்தனர்.

க்ரீம் நிற கோட்சூட் அணிந்திருந்த ஹிலாரி கிளிண்டனை பார்த்தவுடன், வாக்களர்கள் ஆரவாரம் செய்து, ஆர்ப்பரித்தனர். அவர்களுடன் கைகுலுக்கி, மகிழ்ச்சியூட்டி தனது வாக்கை செலுத்திவிட்டு ஹிலாரிபுறப்பட்டார்.