Heavy rain in austrelia
ஆஸ்திரேலியாவின் வடக்கு குயீன்ஸ்லாந்து பகுதியில் தாக்கிய Debbie சூறாவளியால் வீடுகள் உட்பட பல்வேறு இடங்கள் பலத்த சேதமடைந்தன. கடந்த 48 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டா மழை பெய்துள்ளதால் எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து மாகாணத்தில் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய Debbie சூறாவளியால் வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
குயீன்ஸ்லாந்து மாகாணத்தின் போவென் மற்றும் ஏர்லி பகுதிக்கிடையே Debbie புயல் கரையை கடந்தது. இதனால் மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியது.
வரலாறு காணாத அளவுக்கு 48 மணி நேரத்தில் 100 சென்டிமீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. 6 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் அந்த மாகாணம் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
சூறாவளியை முன்கூட்டியே கணித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதுடன் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும் பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் வீட்டின் மேற்கூரைகள் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடங்கியுளளது. தற்போது அப்பகுதியில் ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
