பின்லேடன் மகனைப்போட்டுத் தள்ளிய அமெரிக்கா !! டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு !!
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்லப்பட் நிலையில் தற்போது அவரது மகன் கம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார். அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் இளவரசராக பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
அன்று முதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடிவந்த நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வந்தது.
இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2-ம் தேதி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக பெயரிடப்படாத அதிகாரிகளை சுட்டிக்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 2 ஆண்டில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், ஹம்ஸா பின்லேடன் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்தநிலையில், அல்கொய்தா வாரிசு ஒசாமா பின்லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூவமாக அறிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.