மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீ்ஸ் சயீத் :பாகிஸ்தான் வீட்டுச் சிறையில் அடைப்பு!
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீ்ஸ் சயீத், லாகூரில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீ்ஸ் சயீத். இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஹபீ்ஸ் சயீத், நேற்று, லாகூரில் உள்ள அவரது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இவரது பயங்கரவாத அமைப்புக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக, பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் சட்ட அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட சயீத், 6 மாத காலத்திற்கு வீட்டு சிறையில் வைக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Home
- உலகம்
- மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீ்ஸ் சயீத் :பாகிஸ்தான் வீட்டுச் சிறையில் அடைப்பு!
மும்பை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீ்ஸ் சயீத் :பாகிஸ்தான் வீட்டுச் சிறையில் அடைப்பு!
Latest Videos
