ஆண்டவா இது என்ன கொடுமை.. கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு அபாயம். அலறும் மருத்துவர்கள்.

சமூக, பொருளாதார மற்றும் வயது, பாலின அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் கடுமையான இருதய பிரச்சனைகளை பலர் சந்திப்பதாகவும் ஆராய்ச்சி முடிவு காட்டுவதாக ஆய்வில் இணை ஆசிரியரான உயேமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயோனிஸ்  கட் சோலாரிஸ் தெரிவித்துள்ளார்

.

God what a horrible thing .. risk of heart attack in 2 weeks after corona attack. doctors Screaming .

கொரோனா வைரஸ் தாக்கிய இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஆராய்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  இது ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலை, இரண்டாவது என அடுத்தடுத்து உருவாகி மனித குலத்திற்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தொடர் கொரோனா தாக்குதலால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. விரைவில் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்றும், இன்னும் இரண்டாவது அலை முடியவில்லை என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

God what a horrible thing .. risk of heart attack in 2 weeks after corona attack. doctors Screaming .

மேலும் ஒட்டுமொத்த உலகுக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கிய இரண்டு வாரங்களில் அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்குவரை அதிகரித்துள்ளதாக தி லான்செட் இதழில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்வீடன்  நாட்டில் உள்ள உமேயா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி 1 முதல்  செப்டம்பர் 14 வரை  மேற்கொண்டன ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது. சுமார் 86 ஆயிரத்து 742 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதித்த இரண்டு வாரங்களில் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. 

God what a horrible thing .. risk of heart attack in 2 weeks after corona attack. doctors Screaming .

சமூக, பொருளாதார மற்றும் வயது, பாலின அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் கடுமையான இருதய பிரச்சனைகளை பலர் சந்திப்பதாகவும் ஆராய்ச்சி முடிவு காட்டுவதாக ஆய்வில் இணை ஆசிரியரான உயேமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயோனிஸ்  கட் சோலாரிஸ் தெரிவித்துள்ளார்.covid-19 எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தங்களது முடிவுகள் காட்டுவதாகவும், இதன் மூலம் குறிப்பாக முதியவர்களே அதிக அளவில் மாரடைப்பு, பக்கவாதத்திற்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மிகப்பெரிய ஒரு சவாலானது என்றும் ஏற்கனவே பக்கவாதம் அல்லது மாரடைப்பு அறிகுறி உள்ளவர்கள் இந்த ஆய்வில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டனர் என்றும், இதில் இரண்டு வகையான அணுகுமுறைகள் கையாளப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். 

God what a horrible thing .. risk of heart attack in 2 weeks after corona attack. doctors Screaming .

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் இரண்டு புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தியதாகவும், பொருந்திய கூட்டு ஆய்வு மற்றும் சுய-கட்டுப்பாட்டு வழக்கு தொடர் ஆய்வு என அவர் கூறினார். தடுப்பூசிகளைத் தொடர்ந்து சிக்கல்களின் அபாயத்தை தீர்மானிக்க முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முறை என்று அவர்கள் கூறினர்."இரண்டு முறைகளும் கடுமையான மாரடைப்பு மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கிற்கு COVID-19 ஒரு ஆபத்து காரணி என்று தெரிவித்ததாக கூறினார். மொத்தத்தில் தடுப்பூசி என்பது அபாயத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் என அவர் கூறினார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios