ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தை பாராட்டி உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி  மெலிண்டா ஆகியோர்  இணைந்து நடத்தும் மெலிண்டா கேட்ஸ் என்ற   அறக்கட்டளையின் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரதமராக பொறுப்பேற்றதற்கு பின்னர் இந்தியாவுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறார்  மோடி, இதுவரை அவர் அறிவித்த பல திட்டங்களில்  மிக முக்கியமான திட்டம் என்றால் அது ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டமாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு நாட்டு மக்கள் மத்தியில் சுகாதாரம் குறித்து மிகப் பெரிய விழிப்புணர்வு  அது ஏற்படுத்தியுள்ளதுடன் இன்று, அது மக்கள் இயக்கமாகவே மாறியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை  பாராட்டி  உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிந்த ஆகியோர் இணைந்து மெலிந்தா கேட்ஸ் என்ற தங்கள் அறக்கட்டளையின் சார்பில் கடந்த்த மாதல்  அவருக்கு விருது அறிவித்திருந்தனர். அவர் அமெரிக்காவுக்கு வரும்போது அவருக்கு விருது வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

 

 இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவில்  ஹூஸ்டன் இல் நடைபெற்ற  ஹைவுடி மோடி  உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் அந்த நிகழ்ச்சிகள் முடிந்த  நிலையில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார். எனவே  ஏற்கனவே அறிவித்தபடி பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்திற்காக குளோபல் கோல்கீப்பர்  விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்  பில்கேட்ஸ் மோடிக்கு விருது வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய மோடி  பில் கேட்ஸ் மற்றும் அவரது அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர்,  இந்து விருது எனக்கானது அல்ல, இந்தியாவிற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும்  இதை சமர்ப்பிக்கிறேன் என்றார். 

தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றியதுடன்,  தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே அதை மாற்றிக் கொண்டனர் என்றார். இத்திட்டத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன,  இதனால் ஏழை எளிய மக்களுக்கு சுகாதாரம் சென்று சேர்ந்துள்ளது என்றார். அதே நேரத்தில் இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற சுகாதாரம் மேம்பட்டுள்ளதுடன், குழந்தைகளுக்கான இதயக் பிரச்சனை குறைந்துள்ளதாக மெலிந்தா தொண்டு நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேற்கோள் காட்டி பேசினார். இந்தியா துப்புரவு இலக்கை அடைவது மட்டுமல்ல மற்ற இலக்குகளை அடையவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்றார் மோடி.