உலகளவில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  35,00,000 தாண்டியுள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 245,081ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 1,128,958 பேர் குணமடைந்துள்ளனர். 

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரஸ் தாக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள போதும் அதன் விரீயம் சற்றும் குறையாமல் உயிரிழப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 3,502,956 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 245,081 பேர் உயிரிழந்துள்ளனர். 1,128,958 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு:-

உலகிலேயே அதிகபட்சமாக, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 1,160,996 பேர் பாதிப்படைந்துள்ளனர். 67,448 பேர் உயிரிழந்துள்ளனர். 173,725 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 16,475 பேர் உள்ளனர். 

2வது இடத்தில் ஸ்பெயின் நாடு உள்ளது, அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 245,567ஆக உள்ளது. இதுவரை 25,100 பேர் உயிரிழந்துள்ளனர். 146,233 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,386 பேர் உள்ளனர். 

3வது இடத்தில் இத்தாலி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 209,328ஆக உள்ளது. இதுவரை 28,710 பேர் உயிரிழந்துள்ளனர். 79,914 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 1,539 பேர் உள்ளனர். 

4வது இடத்தில் இங்கிலாந்து நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 182,260ஆக உள்ளது. இதுவரை28,131    பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் யாருமில்லை. கவலைக்கிடமாக 1,559 பேர் உள்ளனர். 

5வது இடத்தில் பிரான்ஸ்  நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 168,396ஆக உள்ளது. இதுவரை 24,760 பேர் உயிரிழந்துள்ளனர். 50,562 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 3,827 பேர் உள்ளனர். 

6வது இடத்தில் ஜெர்மனி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 164,967ஆக உள்ளது. இதுவரை 6,812 பேர் உயிரிழந்துள்ளனர். 130,600 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,105 பேர் உள்ளனர். 

7வது இடத்தில் ரஷ்யா நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 134,687ஆக உள்ளது. இதுவரை 1,280 பேர் உயிரிழந்துள்ளனர். 16,639 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,300 பேர் உள்ளனர். 

8வது இடத்தில் துருக்கி நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை124,375ஆக உள்ளது. இதுவரை 3,336 பேர் உயிரிழந்துள்ளனர். 58,259 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 1,445 பேர் உள்ளனர். 

9வது இடத்தில் ஈரான் நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 97,424ஆக உள்ளது. இதுவரை6,203 பேர் உயிரிழந்துள்ளனர். 78,422 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 2,690 பேர் உள்ளனர். 

10வது இடத்தில் பிரேசில் நாடு உள்ளது. அங்கு கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 97,100ஆக உள்ளது. இதுவரை 6,761 பேர் உயிரிழந்துள்ளனர். 40,937 குணமடைந்துள்ளனர். கவலைக்கிடமாக 8,318 பேர் உள்ளனர். 

அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 16வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 39,980 பேர் பாதிப்படைந்துள்ளனர். 1,323    பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 10,819 பேர் குணமடைந்துள்ளனர்.  இவ்வாறு உலக மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான  போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே பல மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.