இங்கிலாந்தைச் சேர்ந்த மரிட்சா என்பவர் தனது மூன்று வயது மகனை இரவு நேரத்தில் கண்காணிக்க தனியாக கேமரா பொருத்தியிருந்தார். நாள்தோறும் அந்த கேமராவில் பதிவாகியிருப்பதை  மரிட்சா பார்த்து தனது மகன் தூங்கும் போது என்ன செய்கிறார் என பார்த்து மகிழ்வார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கேமரா பதிவுகளைப் பார்த்த மரிட்சா அதிர்ந்து போனார்.  ஏனென்றால் தனது  மகன் அருகில் குழந்தை உருவத்தில் யாரோ படுத்திருப்பதைப் பார்த்து ஒருநிமிடம் அவர்  அச்சத்தில் உறைந்து போனார். 

இதையடுத்து  மகன் அறைக்கு ஓடிச்சென்று மொபைல் வெளிச்சத்தில் மகன் அருகே பார்த்தபோது யாருமே இல்லாததால் குழப்பத்தில் மூழ்கினார். ஒரு வேளை மகன் அருகில் பேய் தான் படுத்திருந்ததோ என்னும் பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் விழித்திருந்தார்.

காலை மகன் அறைக்குச் சென்று மீண்டும் பார்த்தபோது தான் உண்மையை கண்டு பிடித்துள்ளார். அதாவது மகன் தூங்கும் மெத்தையிலிருந்த குழந்தை படத்தைத் தான் இரவில் பார்த்துப் பயந்துள்ளார் மரிட்சா.

இச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மரிட்சா," எனது மகன் அருகில் பேய் தான் படுத்திருந்துள்ளது என இரவு முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தேன். இதனால் எனது தூக்கம் முழுமையாகப் பறிபோனது. 

காலை மீண்டும் சென்ற போதுதான் புரிந்தது எனது கணவர் மெத்தையின் லேபிளை கிழிக்காமல் விட்டுள்ளார். இத்தனை குழப்பத்திற்குக் காரணமான எனது கணவரைக் கொலை செய்ய முடியும் எனப் பதிவிட்டார். தற்போது மரிட்சாவின் ஃபேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது