கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தது ஜெர்மனி.!! கம்பெனியை விலைக்கு வாங்க அமெரிக்கா போட்ட பயங்கர பிளான்..!!
அதாவது க்யூர்வேக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின்போது அது பற்றி ட்ரம்ப் குறிப்பிட்டதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான க்யூர்வேக் எனும் நிறுவனம் மருந்து உருவாக்கியுள்ளது இது ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என தகவல்வெளியாகி உள்ள நிலையில் மருந்து நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என சீன தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது . இந்நிலையில் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கடந்த ஞாயிறு அன்று கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர் .
புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது . மொத்தத்தில் 80 ஆயிரத்து 860 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சுமார் 1200 பேர் இந்த வைரசிலிருந்து குணமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது . இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஈரான் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது . இதையடுத்து மேற்பட்ட நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகளவில் 7,200 பேர் வைரசால் உயிரிழந்துள்ளனர் . இதுவரை வைரஸை தடுக்க மருந்து இல்லாததால் வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது இந்நிலையில் ஜெர்மனியின் முன்னணி மருந்து ஆராய்ச்சி நிறுவனமான க்யூர்வேக் எனும் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான மருந்து உருவாகியுள்ளது. இந்நிறுவனம் தற்போது இந்த மருந்தை சோதனை செய்து வருகிறது . ஜூலை முதல் இந்த மருந்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது .
இந்நிலையில் மருந்து நிறுவனத்தை கையகப்படுத்த அமெரிக்க அதிபர் தீவிரம் காட்டி வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது ஜெர்மனி நிறுவனத்தில் அந்த மருந்தை கொள்முதல் செய்வதற்கும் மொத்தமாக நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்கும் அதிபர் ட்ரம்ப் முயன்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவந்ததாக கூறப்படுகிறது . மருந்து நிறுவனத்தை வாங்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது . அதவது கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை வாங்கினால் , மருந்து அமெரிக்க வாசம் வரும் , அவ்வாறு வரும் பட்சத்தில் வேறு நாடுகளுக்கு மருந்து விற்பனை செய்யாமல் அமெரிக்காவிற்கு மட்டும் மருந்து பயன்படுத்துவதற்கு அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார் . அதாவது க்யூர்வேக் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தையின்போது அது பற்றி ட்ரம்ப் குறிப்பிட்டதாக ஜெர்மனி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
அதாவது கொரோனாவுக்கு மருந்து உருவாக்குவதற்கு செலவு அதிகம் , அதே நேரத்தில் குறைந்த அளவு மருந்தை உருவாக்குவதற்கு பல நாட்கள் ஆகும் என்பதால் தான் அமெரிக்கா மருந்தை வாங்கும் ஆனால் விற்காது என பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கொரோனாவுக்கு எதிரான மருந்து மட்டும் 10 மில்லியன் டாலர் அதாவது , 74 ,110 கோடி அதாவது மொத்த நிறுவனத்தையும் வாங்க 25 பில்லியன் டாலர் 1 லட்சத்து 85 ஆயிரத்து 275 கோடி தருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அந்த நிறுவனத்திடம் விலை பேசியுள்ளதாக கூறப்படுகிறது . சம்பிளே பேசியதற்கான ஆதாரங்கள் ஜெர்மனி நாளிதழில் வெளியாகியுள்ளது அதே நேரத்தில் தங்கள் நாட்டின் மருந்து நிறுவனத்தை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை எனவும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.