சலிப்பா இருந்ததால்... 106 நோயாளிகளின் சாவுக்கு காரணமான நர்ஸ்...
ஜெர்மனியைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர், தனக்கு மனச் சலிப்பு இருந்ததால், 106 பேரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்துள்ளார். நோயாளிகளுக்கு மாரடைப்பு மருந்துகளைக் கொடுத்து 106 பேரின் இறப்புக்கு காரணகர்த்தா ஆகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வடக்கு நகரமான ப்ரீமேன் அருகே உள்ள டெல்மேன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் பணிபுரிந்த நர்ஸ் (ஆண்) நைல்ஸ் ஹோகேல் (41), கடந்த 2015 ஆம் ஆண்டில், இரண்டு படுகொலைகள், நான்கு கொலை முயற்சிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களுக்கு அபாயகரமான வகையில் தீங்கிழைத்த குற்றத்துக்காக தண்டனைக்கு உள்ளானார்.
ஆனால், அந்த மருத்துவமனைக்கு வந்து சென்றவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய விசாரணையில், ஹோகல் 90 க்கும் அதிகமான நோயாளிகளைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை நேற்று போலீஸார் மற்றும் வழக்குரைஞர்கள், கடந்த 1999 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில், ஹோகல் இரண்டு மருத்துவமனைகளில் பணியாற்றியபோது, மேலும் 16 இறப்புக்களுக்குக் காரணமானதை உறுதி செய்துள்ளனர்.
இன்னும் ஐந்து இறப்புக்கள் மற்றும் துருக்கியில் இருந்து வந்த நோயாளிகள் மூவரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், நச்சுத்தன்மையுள்ள ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஹெகலுக்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகளை அவர்கள் கூறுவர் என எதிர்பார்க்கிறார்கள்.
இதய செயலிழப்பு ஏற்படுத்தும் அல்லது, இதய இயக்கத்தினை மட்டுப் படுத்துவதற்கான வீரியமுள்ள மருந்தை நோயாளிகளுக்கு ஊசி மூலம் உட்செலுத்தியதாக ஹேகல் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பின்னர் வேறு மருந்துகள் மூலம் அவர்களை உயிர்தெழுப்ப முயற்சி செய்வார். அந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால், நோயாளிக்கு லக். அதன் பின்னர் ஹேகல், அந்த நோயாளிகளின் முன் ரட்சகரைப் போல் தெரிவார்.
சில நேரங்களில் அவர் ‘சலிப்பு’ காரணமாக இவ்வாறு செயல்பட்டுள்ளார். இவ்வகையில் அவரால் நோயாளிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடிந்தது, அல்லது அது தோல்வியுற்றபோது பேரழிவுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.
இவ்வகையில், நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை "ஜெர்மன் குடியரசின் வரலாற்றில் இதுவரை இல்லாதது" என்று இதனை விசாரணை செய்யும் தலைமை போலீஸ் ஆணையர் ஆணும் ஷிமிட், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூறியிருந்தார். அவ்வகையில், ஹெகல் மருத்துவ சிகிச்சையின் முக்கிய நிலையில் இருப்பவர்களைக் கொன்றுவிட்டார்.
எல்லா நோயாளிகளின் கேஸ்களிலும் அவர்களின் தன்மைகள் ஹேகலுக்கு நினைவு இல்லை. ஆனால், சுமார் 30க்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் அவர் நடந்து கொண்டது, நோயாளிகளின் நடத்தை ஆகியவை அவருக்கு நினைவில் உள்ளது என்று வழக்கறிஞர் டேனியல் ஷிரெக் போல்மென் கூறியுள்ளார்.
ஆனால், இந்த இறப்பு எண்ணிக்கை ஒரு வரம்புக்குள் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.
கடந்த 2005 ஜூன் மாதம் இவர் குறித்த தகவல்கள் வெளிவந்தன. அப்போது, ஒரு நோயாளிக்கு இவர் மேற்கொண்ட ஊசி மூலம் ‘ஊக்கம்’ அளிக்கும் முயற்சியில், எதிர்பாரா விதமாக அந்த நோயாளி தப்பினார். ஆனால் அவர் குறித்து அப்போது கொடுக்கப்பட்ட புகாரால், ஜூன் 2008 இல் பல வழக்குகளில் அவருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த செய்தி ஊடகங்களில் வந்த போது, ஒரு பெண் தனது தாயும் இதே விதத்தில் உயிரிழந்ததாகவும், அதுகுறித்த சந்தேகத்தில் பேரில் நர்ஸ் மீது புகார் கொடுப்பதாகவும் காவல் துறையை அணுகினார். இப்படி பல்வேறு புகார்கள் வந்த நிலையில், இறுதியில் ஹேகல் 2015 ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் இடைப்பட்ட காலத்திலும் அவர் தன் போக்கில் மாறவே இல்லை. பல நோயாளிகளை கொலை செய்து வந்தார். சில உண்மைகள் வெளியில் புகைந்து கொண்டிருந்த நேரத்திலும் அவர் தன் போக்கில் இருந்ததால், எத்தனை பேர் உயிர் இழந்தனர் என்ற உண்மை எண்ணிக்கை தெரியவில்லை.
ஹோகெல் பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான இறப்புக்கள் குறித்து விரைவாக செயல்படத் தவறியதால் டெல்மோர்ஹார்ஸ்டில் உள்ள பல மூத்த மருத்துவ ஊழியர்கள் இப்போது விசாரணையை எதிர்கொண்டிருக்கின்றனர்.